பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி பண பரிவர்த்தனை மோசடி தடுக்க அழைக்கலாம் 155 260 சிவகங்கை எஸ்.பி., தகவல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சிவகங்கை : வங்கிகளின் பெயரில் ஆன்லைனில் பண மோசடியில் பாதிக்கப்படுவதை தவிர்க்க டோல்ப்ரீ எண் 155 260 அழைத்தால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு தடை போடும் திட்டம் சிவகங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது.ஹலோ சார் பேங்ல இருந்து பேசுறோம்... உங்கள் வங்கி கணக்கு எண் கொடுத்தால் ஒரு ஓ.டி.பி., எண் வரும் அதற்கு பின் வங்கி கணக்கு எண் மாற்றித்தருகிறோம் என பேசினால் கவலைப்படாதீர்கள்.

சிவகங்கை : வங்கிகளின் பெயரில் ஆன்லைனில் பண மோசடியில் பாதிக்கப்படுவதை தவிர்க்க டோல்ப்ரீ எண் 155 260 அழைத்தால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு தடை போடும் திட்டம் சிவகங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹலோ சார் பேங்ல இருந்து பேசுறோம்... உங்கள் வங்கி கணக்கு எண் கொடுத்தால் ஒரு ஓ.டி.பி., எண் வரும் அதற்கு பின் வங்கி கணக்கு எண் மாற்றித்தருகிறோம் என பேசினால் கவலைப்படாதீர்கள். இது போன்ற மோசடி கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேசிய சைபர் கிரைம் போர்டல் மூலம் (என்.சி.ஆர்.பி.,) டோல்ப்ரீ எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அலைபேசிக்கு வங்கியில் இருந்து பேசுவது போலவும், ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி வங்கிகணக்கிற்கு பணம் கட்ட கூறினால் வங்கி கணக்கு கொடுக்கும் முன் உடனே டோல் ப்ரீ எண் 155 260' போன் செய்தால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாத வகையில் தடை செய்யப்படும்.

ஆன்லைன் மோசடிக்கு தடை
எஸ்.பி., செந்தில் குமார் கூறியதாவது: வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு எண் பெற்று மோசடியாக பணம் எடுத்தல், ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி போன் பே, கூகுள் பே' மூலம் பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்து மோசடியில் ஈடுபடுவதாக அதிக புகார்கள் வருகின்றன.இம் மோசடியை தடுக்கவே டோல் ப்ரீ எண்ணுக்கு போன் செய்த உடன் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாத வகையில் தடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X