பொது செய்தி

தமிழ்நாடு

தற்கொலை எண்ணம் தடுக்க '104'ல் பிரத்யேக மையம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதை தொடர்ந்து, '104' எனும் மருத்துவ சேவை மையத்தில், பிரத்யேக ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் இன்று செயல்பாட்டுக்கு வருகிறது.இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மனரீதியாக பாதிக்கப்படுவோரின் மன திடத்தை அதிகரித்தால் அவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிடுவர்.

சென்னை:தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதை தொடர்ந்து, '104' எனும் மருத்துவ சேவை மையத்தில், பிரத்யேக ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் இன்று செயல்பாட்டுக்கு வருகிறது.இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மனரீதியாக பாதிக்கப்படுவோரின் மன திடத்தை அதிகரித்தால் அவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிடுவர். குறிப்பாக, வீட்டில் இருப்போரிடமோ, நண்பர்களிடமோ மனம் விட்டு பேசும் போது பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதன்படியே, 104 எனும் மருத்துவ சேவையில் பிரத்யேக மையம் துவங்கப்பட்டு உள்ளது.

தற்கொலை எண்ணம் இருப்போர், 104 எனும் எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும். மேலும், அடிக்கடி அவர்களிடம் தொடர்பு கொண்டு நண்பர்களாக பேசி, இயல்பு நிலைக்கு அவர்கள் திரும்ப வழிவகை செய்யப்படும். இந்த மையம் இன்று செயல்பாட்டுக்கு வர உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X