தொற்றால் பெற்றோர் பலி குழந்தைகளுக்கு ரூ.4,000 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தொற்றால் பெற்றோர் பலி குழந்தைகளுக்கு ரூ.4,000

Added : செப் 15, 2021
Share
புதுடில்லி:கொரோனா தாக்குதலுக்கு பல குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்.இதனால் 'பி.எம்., கேர்ஸ் பார் சில்ரன்' திட்டத்தின் கீழ், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என கடந்த மே மாதம் மத்திய அரசு அறிவித்தது.பெற்றோர், சட்டப்பூர்வ பாதுகாவலர், தத்தெடுத்த பெற்றோர் என இருவரையும் இழந்த குழந்தைகள், நிதி உதவி பெற தகுதியானவர்களாக

புதுடில்லி:கொரோனா தாக்குதலுக்கு பல குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்.இதனால் 'பி.எம்., கேர்ஸ் பார் சில்ரன்' திட்டத்தின் கீழ், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என கடந்த மே மாதம் மத்திய அரசு அறிவித்தது.

பெற்றோர், சட்டப்பூர்வ பாதுகாவலர், தத்தெடுத்த பெற்றோர் என இருவரையும் இழந்த குழந்தைகள், நிதி உதவி பெற தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டனர்.இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற, நாடு முழுதும் இதுவரை 3,250 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இவற்றில் 667 விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட குழந்தைகள் வசிக்கும் மாவட்ட கலெக்டர்களால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே குழந்தைகளுக்கான மாதாந்திர நிதி உதவியை 4,000 ரூபாயாக உயர்த்த, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X