போலீஸ் டைரி: ஆட்டோவில் மோதி விவசாயி பலி| Dinamalar

போலீஸ் டைரி: ஆட்டோவில் மோதி விவசாயி பலி

Added : செப் 15, 2021
Share
பொங்கலுார், செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் சென்னியப்பன், 65; விவசாயி. இவர் நேற்று காலை கோவை - திருச்சி ரோட்டில் பைக்கில் சென்றார். கருணைபாளையம் பிரிவு அருகே சென்றபோது ரோட்டோரத்தில் நின்றிருந்த சரக்கு ஆட்டோ மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை உயிரிழந்தார்.

பொங்கலுார், செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் சென்னியப்பன், 65; விவசாயி. இவர் நேற்று காலை கோவை - திருச்சி ரோட்டில் பைக்கில் சென்றார். கருணைபாளையம் பிரிவு அருகே சென்றபோது ரோட்டோரத்தில் நின்றிருந்த சரக்கு ஆட்டோ மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை உயிரிழந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
திருப்பூர், கூலிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில், 80 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் வாவிபாளையத்தை அடுத்த நெட்டகட்டிபாளையத்தை சேர்ந்த சின்னமாரநாயக்கன், 85 என்பது தெரிய வந்தது. நேற்றிரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற அவர், எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்தார்.

போலீஸ் வாகனம் மீது காரை உரசியவர் கைது

செப்., 12ல், அமைச்சர் சாமிநாதன் பயணித்த கார், மங்கலம் ரோடு வழியாக சென்றது. காரின் முன்னும், பின்னும் பாதுகாப்பு போலீசார் சென்றனர். கல்லம்பாளையம் பகுதியில், எதிரே வந்த கார் ஒன்று, பாதுகாப்பு போலீசாரின் ஜீப் மீது மோதியது.அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. போலீஸ் ஜீப் டிரைவர் சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் கூறுகையில், 'குடிபோதையில் கார் ஓட்டி வந்த, கல்லம்பாளையத்தை சேர்ந்த கவிசங்கர், 23 என்பவரின் கார், போலீஸ் ஜீப் மீது உரசியது. ஜீப் டிரைவர் அளித்த புகாரின் பேரில், நேற்று முன்தினம், அவர் மீது வழக்கு பதியப்பட்டு, தாராபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X