பொது செய்தி

தமிழ்நாடு

சம்பா நெற்பயிருக்கு காப்பீடுசெய்ய நவ. 15 கடைசி நாள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நெற் பயிர் காப்பீடு செய்ய நவ. 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதம மந்திரியின் திருத்திய பயிர் காப்பீடு திட்டத்தில்காப்பீடு செய்தால் பயிர்கள் எதிர்பாராத விதமாக சேதமடையும் போது இழப்பீடு 2016-17 முதல் வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு சம்பா பருவத்திற்கான நெற்பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கான நெற்பயிருக்கு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நெற் பயிர் காப்பீடு செய்ய நவ. 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் திருத்திய பயிர் காப்பீடு திட்டத்தில்காப்பீடு செய்தால் பயிர்கள் எதிர்பாராத விதமாக சேதமடையும் போது இழப்பீடு 2016-17 முதல் வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு சம்பா பருவத்திற்கான நெற்பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கான நெற்பயிருக்கு காப்பீடு பிரிமியத்தில் விவசாயிகளின் பங்குத்தொகை 361 ரூபாய் 52 காசு மட்டுமே.

விவசாய கடன் பெற்ற, பெறாத விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பெயரில் நவ., 15 ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.நெல் சாகுபடிக்கான அடங்கலை வி.ஏ.ஓ., க்களிடம் பெற்று ஆதார் எண், வங்கி கணக்கு விபரம், கருத்துரு படிவங்களுடன் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்களில் பிரிமியம் தொகையுடன் உரிய ஆவணங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.பதிவு செய்ததற்கான ஒப்புகைச்சீட்டில் விவசாயிகள் தங்களின் நெல் பயிர் சாகுபடி, வருவாய்கிராமம், சர்வே எண், பயிர் சாகுபடி பரப்பு, வங்கி கணக்கு விபரங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாஎன்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும், என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X