சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பயோமெட்ரிக்' தளர்வு கோரி மாதர் சங்கத்தினர் போராட்டம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
திருப்பூர்:ரேஷன் கடைகளில், பொருட்கள் வினியோகமும் பாதிக்கப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பு முழுமையாக தீராத நிலையில், பயோமெட்ரிக் பதிவில் இருந்து தளர்வு கோரி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று, ஐந்து இடங்களில் போராட்டம் நடத்தினர்.கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம் நடத்தி, குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். மாவட்ட

திருப்பூர்:ரேஷன் கடைகளில், பொருட்கள் வினியோகமும் பாதிக்கப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பு முழுமையாக தீராத நிலையில், பயோமெட்ரிக் பதிவில் இருந்து தளர்வு கோரி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று, ஐந்து இடங்களில் போராட்டம் நடத்தினர்.கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம் நடத்தி, குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் மைதிலி, செயலாளர் பவித்ரா, பொருளாளர் ஷகிலா, மாநில துணை செயலாளர் சாவித்திரி உள்ளிட்டோர், மனு கொடுக்கும் போராட்டங்களில் பங்கேற்றனர்.போராட்டத்தின் நிறைவாக, மாவட்ட வழங்கல் அலுவலர் முருகனிடம் கொடுத்த மனுவில்,'ரேஷன் கடைகளில், 'பயோமெட்ரிக்' பதிவு முறைக்கு, தற்காலிக விலக்கு அளிக்க வேண்டும். மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால், இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும், அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் வழங்க வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X