பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி நுாலகங்களுக்கான புத்தகங்கள் தேர்வு செய்ய குழு அமைக்க முடிவு

Added : செப் 15, 2021
Share
Advertisement
கோவை;பள்ளி நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்க, மாநில அளவில் குழு அமைக்க, தகுதியானவர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள நுாலகங்களுக்கு ஆண்டுதோறும் புத்தகங்கள் வழங்குவது வழக்கம். மாநில குழு பரிந்துரைத்த புத்தகங்களை, பள்ளி

கோவை;பள்ளி நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்க, மாநில அளவில் குழு அமைக்க, தகுதியானவர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள நுாலகங்களுக்கு ஆண்டுதோறும் புத்தகங்கள் வழங்குவது வழக்கம். மாநில குழு பரிந்துரைத்த புத்தகங்களை, பள்ளி மேலாண்மை குழு ஒப்புதலோடு வாங்கி, மாணவர்கள் வாசிக்க ஏற்பாடு செய்யப்படும்.நடப்பாண்டிற்கு புத்தகங்கள் தேர்வு செய்யும் குழுவிற்கு, தகுதியான நபர்களின் பெயர்களை மாவட்ட வாரியாக பரிந்துரைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் மற்றும் தலைசிறந்த தலைமையாசிரியர் ஒருவரின் பெயரை அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட வாரியாக அனுப்பப்படும் பெயர் பட்டியல் அடிப்படையில் குழு அமைக்கப்படும். இவர்களின் பரிந்துரைப்படி, மாணவர்களின் வயது, வகுப்புக்கு ஏற்ப, எந்தெந்த தலைப்பிலான புத்தகங்கள் வாசிக்கலாம் என்ற பட்டியல், விரைவில் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X