விளையாட்டு செய்திகள்: மாவட்ட கூடைப்பந்து போட்டி

Added : செப் 15, 2021
Share
Advertisement
எஸ்.டி.சி., - ராஜலட்சுமி வெற்றிமாவட்ட அளவிலான கூடைப்பந்து 'லீக்' போட்டியில், எஸ்.டி.சி., பி.பி.சி., அணியும், ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் வெற்றி பெற்றன.கோவை மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் சார்பில், டிவிஷன் போட்டிக்கான தகுதி போட்டி நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடக்கிறது. 'லீக்' மற்றும் 'நாக்-அவுட்' முறையில் நடத்தப்படும்

எஸ்.டி.சி., - ராஜலட்சுமி வெற்றிமாவட்ட அளவிலான கூடைப்பந்து 'லீக்' போட்டியில், எஸ்.டி.சி., பி.பி.சி., அணியும், ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் வெற்றி பெற்றன.கோவை மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் சார்பில், டிவிஷன் போட்டிக்கான தகுதி போட்டி நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடக்கிறது. 'லீக்' மற்றும் 'நாக்-அவுட்' முறையில் நடத்தப்படும் போட்டியில், 48 அணிகள் பங்கேற்றன.முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள், 'ஏ' டிவிஷன் போட்டிக்கு தகுதி பெறும். அடுத்த எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள், 'பி' டிவிஷன் போட்டிக்கு தகுதி பெறும். இம்மாதிரி 'ஏ', 'பி', 'சி' என, மூன்று டிவிஷன் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளனர்

.* 'லீக்' சுற்று போட்டியில் ஆர்.எல்.எம்.எச்.எஸ்., 'ஏ' அணி, 66-24 என்ற புள்ளி கணக்கில், வெஸ்டன் காட்ஸ் அணியையும்; மற்றொரு போட்டியில், ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 59-13 என்ற புள்ளி கணக்கில், டிவைன் பி.பி.சி., அணியையும் வென்றன.* 13வது 'லீக்' போட்டியில், ஜெயபாரதி பி.பி.சி., அணி, 74- 17 என்ற புள்ளி கணக்கில், பொள்ளாச்சி பி.பி.சி., அணியையும்; 14வது போட்டியில், எஸ்.டி.சி., பி.பி.சி., அணி, 76-65 என்ற புள்ளி கணக்கில், பீளமேடு பி.பி.சி., அணியையும் வென்றன.
ஆன்லைன் செஸ் போட்டி
அருள் அலெக்சாண்டர் முதலிடம்ஆன்லைன் வாயிலாக நடந்த செஸ் போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அருள் அலெக்சாண்டர் முதலிடம் பிடித்தார்.கோவை, குளோபல் அவுட்லியர் அகாடமியின் சார்பில், செஸ் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, '68வது குளோபல் அவுட்லியர்' செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடத்தது. ஏழு சுற்றுகளாக நடந்த போட்டியில், 30க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின் முடிவில், அருள் அலெக்சாண்டர், வேலுசாமி, பிரஜின் ராமானுஜம் ஆகியோர் அதிக புள்ளிகள் பெற்று முதல், மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு, இ- சான்றிதழ் வழங்கப்பட்டன.

ஐவர் கால்பந்து போட்டிவரும் 19ல் நடக்கிறதுமாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி வரும், 19ம் தேதியன்று தொண்டாமுத்துார், எம்.எஸ்.ஏ., மைதானத்தில் நடக்கவுள்ளது.கோவை தி.மு.க., வடக்கு மாவட்டம் தொண்டாமுத்துார் வடக்கு மற்றும் தெற்கு, எம்.எஸ்.ஏ., பயிற்சி மையம் இணைந்து நடத்தும், முதலாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி எம்.எஸ்.ஏ., மைதானத்தில் நடக்கிறது.

இப்போட்டியில் கோவை, திருப்பூர், சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க உள்ளன.வெற்றி பெறும் அணிகளுக்கு, கோப்பைகள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்படும். மேலும் விபரங்கள் அறிய, 95979 16053 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.மூன்றாம் டிவிஷன் போட்டிஆறுமுகம் சி.சி., அணி வெற்றிமாவட்ட அளவிலான மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், ஆறுமுகம் கிரிக்கெட் கிளப் அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டு 'தாமோதரன் அறக்கட்டளை டிராபிக்கான' மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டிகள், பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானம் 'சி' மைதானத்தில் நடந்தது. இதில், மிராக்கிள் கிரிக்கெட் கிளப் அணி, ஆறுமுகம் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.முதலில் விளையாடிய மிராக்கிள் சி.சி., அணி, 46.3 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 165 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆறுமுகம் சி.சி., அணியினர், 35.1 ஓவரில்,8 விக்கெட் இழப்புக்கு, 166 ரன் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டென்னிஸ் போட்டிபவிஷ்ணு முதலிடம்
கோவை, லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 'ரைசிங் ஸ்டார்ஸ்' மாநில அளவிலான டென்னிஸ் போட்டி காளப்பட்டி ரோடு, லிவோ ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.10 வயது 'கிரீன் டாட் பால்', 'ரெட் பால் மினி கோர்ட்டு', 10 வயது, 12, 14, 16, ஆண்களுக்கான இரட்டையர் பிரிவுகளில் போட்டி நடந்தது.

கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 150க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.* 'ரெட் பால் மினி கோர்ட்டு' பிரிவில் இயல், 15-13 என்ற புள்ளி கணக்கில், ரித்விக்குமாரையும்; 10 வயதுக்கு உட்பட்ட 'கிரீன் டாட் பால்' பிரிவு இறுதிப்போட்டியில், நல்யாழினி, 6-3 என்ற புள்ளி கணக்கில், ஏகன்பாலகுமாரையும் வென்றனர்.* 10 வயது பிரிவில் நரேஷ்பாபு, 6-3 என்ற செட் கணக்கில், மித்ரவிந்தாவையும்; 12 வயது பிரிவு இறுதிப்போட்டியில், பவிஷ்ணு, 6-1 என்ற செட் கணக்கில், ஈஷான் சுதர்சனையும் வென்றனர்.* 14 வயது பிரிவில், அகில் பாபுஜி, 6-3 என்ற செட் கணக்கில், பவிஷ்ணுவையும்; 16 வயது பிரிவில் பாலசூர்யா, 6-3 என்ற செட் கணக்கில், ஜெய்சரணையும் வென்றனர்.*
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், பாலசூர்யா,சதீஷ் பாபு ஜோடி அணி, 6-3 என்ற செட் கணக்கில், பொன்னுசாமி, ரமேஷ் ஜோடி அணியை வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ், பரிசுப்பொருட்கள் வழங்கி பாராட்டினர்.மாவட்ட ஐவர் கால்பந்து'பிரைட்' அணி வெற்றிகோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ஆர்.கே., ஸ்போர்ட்ஸ் பவுன்டேஷன் இணைந்து நடத்தும், முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து தொண்டமுத்துார், மித்ரன் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடந்தது.
12 மற்றும் 14 வயது பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 24 அணிகள் பங்கேற்றன.* 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதிப்போட்டியில் பிரைட் புட்பால் சென்டர் அணி, 2-0 என்ற கோல் கணக்கில், சுகிஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியை வென்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன. சிறந்த வீரர் மற்றும் சிறந்த கோல்கீப்பர்களுக்கு சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X