தமிழகத்தில் நாளை மறுதினம் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தமிழகத்தில் நாளை மறுதினம் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

Added : செப் 15, 2021 | கருத்துகள் (4)
Share
சென்னை:''தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம், நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதற்காக, கூடுதல் தடுப்பூசி கேட்டு மத்திய அரசிடம் பேசி வருகிறோம்,'' என, மக்கள் நல்வாழ்வுத்J துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், பொது சுகாதாரத் துறை ஆய்வகத்தில், 4 கோடி ரூபாய் மதிப்பில், உருமாறிய கொரோனா தொற்றை கண்டறியும் மரபணு பகுப்பாய்வு
 'தமிழகத்தில்  நாளை மறுதினம்  மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

சென்னை:''தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம், நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதற்காக, கூடுதல் தடுப்பூசி கேட்டு மத்திய அரசிடம் பேசி வருகிறோம்,'' என, மக்கள் நல்வாழ்வுத்J துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், பொது சுகாதாரத் துறை ஆய்வகத்தில், 4 கோடி ரூபாய் மதிப்பில், உருமாறிய கொரோனா தொற்றை கண்டறியும் மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.


நடவடிக்கை



இதைத் தொடர்ந்து, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, திறன்மிகு உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வான 91 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:இந்தியாவில் 23 மரபணு பகுப்பாய்வு கூடங்கள் உள்ளன; இவை அனைத்தும் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படுகின்றன.அவற்றுக்கு மரபணு பரிசோதனைக்கு மாதிரி களை அனுப்பினால், முடிவு கிடைக்க ஒன்றரை மாதங்கள் ஆகின்றன.

ஒவ்வொரு மாதிரிக்கும்5,000 ரூபாய் வரைசெலவாகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக, தமிழக அரசு மட்டுமே மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தை அமைத்துள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 1,000 மாதிரிகளை பரிசோதிக்க முடியும். நான்கு மணி நேரத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பொருட்செலவும் குறைவு.

ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட குழு ஆலோசனை, சட்ட வல்லுனர்கள் ஆலோசனை, 86 ஆயிரத்து 342 பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில், 'நீட்' தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது.இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் தருவார். தமிழகத்தில் நீட் தேர்வால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் மன திடத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


முயற்சி



இந்தாண்டு 11 புதிய மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாததால், 5,200 மாணவர்கள் பாதிக்கப்படுவர் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.புதிய மருத்துவ கல்லுாரிகளில் 1,650 மாணவர் இடங்கள் மட்டுமே உள்ளன. கல்லுாரிகளுக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

தமிழகத்தில் நடந்த மாபெரும் தடுப்பூசி முகாம், மக்கள் எழுச்சி காரணமாக வெற்றி பெற்றது. நாளை மறுதினம் மீண்டும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். இதற்காக, மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசி கேட்டு பேசி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X