பொது செய்தி

தமிழ்நாடு

காகிதம் இல்லா காவல் நிர்வாகம் சாப்ட்வேரில் மனு பதிவு

Added : செப் 15, 2021
Share
Advertisement
சிவகங்கை : எஸ்.பி.,யிடம் நேரடியாக மக்கள் வழங்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணும் விதத்தில் மக்கள் குறைதீர் திட்ட சாப்ட்வேர்' அறிமுக கூட்டம் சிவகங்கையில் நடந்தது. போலீசில் காகிதம் இல்லாத நிர்வாகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு எஸ்.பி., செந்தில்குமார் தலைமை வகித்தார். கூடுதல் எஸ்.பி.,க்கள் முரளீதரன், வெற்றி செல்வன்
 காகிதம் இல்லா காவல் நிர்வாகம் சாப்ட்வேரில் மனு பதிவு

சிவகங்கை : எஸ்.பி.,யிடம் நேரடியாக மக்கள் வழங்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணும் விதத்தில் மக்கள் குறைதீர் திட்ட சாப்ட்வேர்' அறிமுக கூட்டம் சிவகங்கையில் நடந்தது.

போலீசில் காகிதம் இல்லாத நிர்வாகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு எஸ்.பி., செந்தில்குமார் தலைமை வகித்தார். கூடுதல் எஸ்.பி.,க்கள் முரளீதரன், வெற்றி செல்வன் முன்னிலை வகித்தனர். தனிப்பிரிவு எஸ்.ஐ.,கோடீஸ்வரன், சைபர் கிரைம் தனிப்படை எஸ்.ஐ., சபரிராஜன் பங்கேற்றனர்.எஸ்.பி., செந்தில்குமார் கூறியதாவது, 2021 ஜன முதல் செப்டம்பர் 14 வரை என்னிடம் கொடுத்த 2241 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

போலீஸ் ஸ்டேஷன்களில் கொடுத்த 13,326 மனுக்களில் 12760 க்கு தீர்வு காணப்பட்டன.எஞ்சிய மனுக்கள் மீது விசாரணை நடக்கிறது. காகிதம் இல்லா நிர்வாகம்' கொண்டு வரும் நோக்கில் மக்கள் வழங்கும் மனுக்களை பதிவு செய்து புதிய சாப்ட்வேர் மூலம் அந்தந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பப்படும். மனு ரசீதில் விசாரணை அதிகாரியின் பெயர், அலைபேசி எண் இருக்கும். மனுதாரர்கள் அன்றே விசாரணை அதிகாரியை சந்தித்து தீர்வு காணலாம்.காகித வழியாக வரும் மனுக்கள் என்னிடம் இருந்து டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்களுக்கு செல்வதன் மூலம் விசாரணையில் தாமதம் ஏற்படும். இதை தவிர்க்கவே என்னிடம் தரும் மனுக்கள் உடனே பதிவேற்றம் செய்து ஸ்டேஷனுக்கு அனுப்பப்படும். இத்திட்டம் அடுத்த கட்டமாக டி.எஸ்.பி., அலுவலகங்களுக்கு வரும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X