பொது செய்தி

தமிழ்நாடு

வசந்தா நகரில் பெயின்ட் அடிக்கணும்...தேவையற்றவற்றை அகற்றணும்

Added : செப் 15, 2021
Share
Advertisement
தொடர் விபத்துமாநகராட்சி, 17வது வார்டுக்கு உட்பட்ட, வடவள்ளி, நவாவூர் பிரிவில், திறந்த நிலையில் உள்ள சாக்கடை கால்வாயால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்தும் நடக்கிறது. இக்கால்வாய்க்கு சிலாப் அமைக்க வேண்டும்.- விஜயகுமார், குருசாமி நகர்.சாக்கடை கால்வாயை துார் வாரணும்அவிநாசி ரோடு மேம்பாலத்தில் இருந்து, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும், புரூக்பாண்ட்


தொடர் விபத்துமாநகராட்சி, 17வது வார்டுக்கு உட்பட்ட, வடவள்ளி, நவாவூர் பிரிவில், திறந்த நிலையில் உள்ள சாக்கடை கால்வாயால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்தும் நடக்கிறது. இக்கால்வாய்க்கு சிலாப் அமைக்க வேண்டும்.- விஜயகுமார், குருசாமி நகர்.

சாக்கடை கால்வாயை துார் வாரணும்அவிநாசி ரோடு மேம்பாலத்தில் இருந்து, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும், புரூக்பாண்ட் ரோட்டில், சாக்கடை கால்வாய் முழுவதும் கழிவால் அடைபட்டுள்ளது; துர்நாற்றம் வீசுகிறது. கால்வாய்க்குள் மரமும் வளர்ந்துள்ளது. இக்கால்வாயை துார்வார வேண்டும்.- கார்த்திக், ராம் நகர்.

குழாய் உடைப்பால் தண்ணீர் வீண்செல்வபுரம், செல்வசிந்தாமணி குளம் அருகில், போயர் வீதியில், பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால், போர்வெல் நீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- செந்தில், போயர் வீதி.

பாதையின்றி மக்கள் தவிப்புநியூசித்தாபுதுார், வெங்கிடசாமி ரோட்டில், தரைப்பாலம் கட்டும் பணி நிறைவடைந்து, இரு மாதங்களாகியும், மக்கள் பயன்பாட்டுக்காக பாதை திறக்கப்படாமல் உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- நெல்சன், நியூசித்தாபுதுார்.

வையாபுரி நகரில் விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 33வது வார்டுக்கு உட்பட்ட, சரவணம்பட்டி, வையாபுரி நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 33) கடந்த சில மாதங்களாக விளக்கு எரிவதில்லை.- சண்முகம், வையாபுரி நகர்.

பராமரிப்பில்லாத பூங்காசாய்பாபா காலனி, சின்ன சுப்பண்ணன் வீதியில் உள்ள, மாநகராட்சி பூங்கா, பராமரிப்பின்றி உள்ளது. வளாகத்துக்குள் குவிந்துள்ள குப்பையை அப்புறப்படுத்தி, பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும்.- முருகேஷ், சாய்பாபா காலனி.

செட்டிவீதியில் வெளிச்சமில்லைமாநகராட்சி, 85வது வார்டுக்கு உட்பட்ட, செட்டி வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 26) கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக விளக்கு எரிவதில்லை.- மீனாட்சி, செட்டி வீதி.

ஆக்கிரமிப்பால் அவதிகாந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில், இருபுறமும், வாகனங்கள் ஆக்கிரமித்து, பார்க் செய்யப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இச்சாலையில் பார்க்கிங் செய்ய தடை விதிக்க வேண்டும்.- ராம்தாஸ், காந்திபுரம்.

வீணாகிறது போர்வெல் நீர்மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்.மில்ஸ், சுப்ரமணியபாளையம், சங்கர் லே-அவுட், இரண்டாவது வீதியில், குழாய் உடைப்பால், போர்வெல் தண்ணீர் வீணாகிறது.- ஜெயராம், சங்கர் லே-அவுட்.

'கேட்வால்வு' இல்லை; வீணாகிறது நீர்மாநகராட்சி, 26வது வார்டுக்கு உட்பட்ட, வெள்ளக்கிணர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு -2 ல் உள்ள, மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிக்கான குழாய்க்கு, கேட் வால்வு இல்லாததால், தண்ணீர் வெளியேறி வீணாகிறது.- மணிமாறன், வெள்ளக்கிணர்.

சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 42வது வார்டுக்கு உட்பட்ட, உடையாம்பாளையம் பிரதான ரோட்டில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கியுள்ளது.- ஆனந்தகுமார், என்.ஜி.புதுார்.

காமராஜ் நகருக்கு விளக்கு வேண்டும்மாநகராட்சி, 97வது வார்டுக்கு உட்பட்ட, சுந்தராபுரம், காமராஜ் நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 2), ஆறு மாதங்களுக்கும் மேலாக விளக்கு எரிவதில்லை. பலமுறை மின் வாரியத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- சரஸ்வதி, காமராஜ் நகர்.

சாலையை செப்பனிடணும்விளாங்குறிச்சி, சாய்பாபா கோவில் ரோடு, சிதிலமடைந்து நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் உள்ளது. இந்த ரோட்டை செப்பனிட வேண்டும்.- ஜெகதீஸ்வரன், விளாங்குறிச்சி.

மின் விபத்து அபாயம்பொள்ளாச்சி ரோடு, சிட்கோ, சாய் நகர் இரண்டாவது வீதியில், மின் கம்பிகளை உரசிய படி மரக்கிளைகள் உள்ளன. மின் விபத்து ஏற்படும் முன், இக்கிளைகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.- லீலா, சாய் நகர்.

வேகத்தடைகளை அகற்ற வேண்டும்சிங்காநல்லுார், வசந்தா நகரில், தேவையற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த வேகத்தடைகளை அகற்ற வேண்டும். அல்லது வேகத்தடைகள் இருப்பதை குறிக்கும் வகையில், வர்ணம் அடிக்க வேண்டும்.- ரகுநாதன், வசந்தா நகர்.

கழிவுநீர் தேக்கம்மாநகராட்சி, 12வது வார்டுக்கு உட்பட்ட, கே.கே.புதுார், கலெக்டர் சிவகுமார் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- பரமேஸ்வரன், கே.கே.புதுார்.

குப்பை தொட்டியை இடம் மாற்றணும்ஆவாரம்பாளையம் ரோடு, தபால் நிலையம் அருகில், போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள, குப்பை தொட்டியை, இடம் மாற்றி வைக்க வேண்டும்.-ரவிச்சந்திரன், ஆவாரம்பாளையம்.

கொசு தொல்லை தாங்க முடியலதடாகம் ரோடு, இடையர்பாளையம், பாரி நகர் சந்திப்பில் உள்ள, பிரதான சாக்கடை கால்வாய், பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது. இக்கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால், கழிவு தேங்கி, கொசு உற்பத்தியாகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- கோமதி, இடையர்பாளையம்.

கால்வாய் அடைப்பை நீக்கணும்நீலிக்கோணாம்பாளையம் பிரதான சாலையின், மேற்கு பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாய், கருப்பராயன் கோவில் முதல் ஐயர் லே-அவுட் வரை, செடிகளால் சூழப்பட்டுள்ளது. இதனால், நீர் செல்ல வழியின்றி, தேங்குகிறது. துர்நாற்றம் வீசுகிறது.- பரத், சுந்தரம் லே-அவுட்.

ரோடு முழுவதும் ஜல்லி கற்கள்பாப்பநாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் வீதியில், சாலை செப்பனிடும் பணி, பாதியில் கைவிடப்பட்டதால், சாலை முழுவதும் ஜல்லி கற்களாக காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- விஷ்வா, பாப்பநாயக்கன்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X