நொய்யல் ஆறு அருகே மருத்துவ கழிவுகள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
கோவை:புட்டுவிக்கி பாலம் அருகில் உள்ள நொய்யல் ஆற்றில், மர்ம நபர்கள் சிலர் மருத்துவ கழிவுகளை கொட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவையில், ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அந்தவகையில், புட்டுவிக்கி பாலம் அருகே செல்லும் நொய்யல் ஆற்றில், சிலர், காலாவதியான மருந்துகள், ஊசிகள், மருந்து
 நொய்யல் ஆறு அருகே  மருத்துவ கழிவுகள்

கோவை:புட்டுவிக்கி பாலம் அருகில் உள்ள நொய்யல் ஆற்றில், மர்ம நபர்கள் சிலர் மருத்துவ கழிவுகளை கொட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவையில், ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அந்தவகையில், புட்டுவிக்கி பாலம் அருகே செல்லும் நொய்யல் ஆற்றில், சிலர், காலாவதியான மருந்துகள், ஊசிகள், மருந்து பாட்டில்கள், மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட பஞ்சு போன்ற மருத்துவ கழிவுகளை கொட்டிச் சென்றுள்ளனர்.இது, மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X