பொது செய்தி

தமிழ்நாடு

கண்காணிப்பு இல்லாத நான்கு வழிச்சாலை விபத்து வாகனங்களை கண்டறிவதில் சிக்கல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
திருப்புவனம் : மதுரை - - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் விபத்தை ஏற்படுத்தி தப்பும் வாகனங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.மதுரையில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த நான்கு வழிச்சாலையை கடந்து செல்கின்றன. கடலோர மாவட்டத்திற்கு செல்லும் இச்சாலையில் சுங்கச்சாவடி தவிர்த்து மற்ற இடங்களில் கண்காணிப்பு கேமரா இல்லை.

திருப்புவனம் : மதுரை - - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் விபத்தை ஏற்படுத்தி தப்பும் வாகனங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மதுரையில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த நான்கு வழிச்சாலையை கடந்து செல்கின்றன. கடலோர மாவட்டத்திற்கு செல்லும் இச்சாலையில் சுங்கச்சாவடி தவிர்த்து மற்ற இடங்களில் கண்காணிப்பு கேமரா இல்லை. விபத்தை ஏற்படுத்தி தப்பும் வாகனங்களை கண்டறிய முடியாமல் போலீசார் சிரமப்படுகின்றனர்.

இலங்கைக்கு அருகாமையில் உள்ள மாவட்டமான ராமநாதபுர மாவட்டத்திற்கு நான்கு வழிச்சாலை வழியாக அதிகளவு சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தப்படுகின்றன. போதிய கண்காணிப்பு கேமரா, போலீசார் இல்லாததால் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்படுகிறது.பல சம்பவங்களில் விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிய முடிவதில்லை. எனவே நான்கு வழிச்சாலையில் குறிப்பிட்ட சந்திப்புகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தி அதனை அருகில் உள்ள காவல்நிலையங்களுடன் இணைக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X