பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்த மாணவர்களின் விபரங்கள் பதிவு

Added : செப் 15, 2021
Share
Advertisement
கோவை:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களின் விபரங்களை, தினசரி 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகள் திறப்பது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக, பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.தொடக்க,

கோவை:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களின் விபரங்களை, தினசரி 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகள் திறப்பது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக, பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மட்டும், கடந்த இரு ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. மாணவர்களின் கற்றல் திறன் பின்தங்கி வருவதால், நேரடி வகுப்புகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.இருப்பினும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, தற்போது நேரடி வகுப்புகள் நடப்பதால், தொற்று பரவுவது அதிகரிக்க துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும், 11 மாணவர்கள், ஆசிரியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லேசான அறிகுறிகளே இருப்பதாக, மருத்துவ அறிக்கைகள் தெரிவிப்பதாக, அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் விபரங்களை, பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில், பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

உடம்பு எப்படியிருக்கு விசாரிக்க உத்தரவு

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் விபரங்கள், தினசரி எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு, அவர்களின் உடல்நிலை குறித்து, தினசரி கேட்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. வருகைப்பதிவு கட்டாயமாக்காததால், உடல்நிலை சரியில்லாத மாணவர்கள், பள்ளிக்கு வர வேண்டாமென தெரிவித்துள்ளோம். இவர்களுக்கு, அன்றைய நாளில் நடத்தப்பட்ட பாட விபரங்கள், அந்தந்த ஆசிரியர்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X