நடுரோட்டில் வாகனம் நிறுத்த ஓசி குடோன்: தினமலர் செய்தியால் அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடுரோட்டில் வாகனம் நிறுத்த 'ஓசி குடோன்': 'தினமலர்' செய்தியால் அகற்றம்

Added : செப் 15, 2021
Share
கோவை:தினமலர் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, சித்தாபுதுாரில் மேம்பாலத்தின் அடியில் பல நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை, போக்குவரத்து போலீசார் அகற்றி, 'பேரிகார்டு' அமைத்தனர்.நியூ சித்தாபுதுார், சின்னசாமி நாயுடு ரோட்டில், ஐயப்பன் கோவில் அருகே ரோட்டின் நடுவே இன்ஜின் உள்ளிட்ட பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில், விலை உயர்ந்த பைக்குகள் தாறுமாறாக
 நடுரோட்டில் வாகனம் நிறுத்த 'ஓசி குடோன்': 'தினமலர்' செய்தியால் அகற்றம்

கோவை:தினமலர் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, சித்தாபுதுாரில் மேம்பாலத்தின் அடியில் பல நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை, போக்குவரத்து போலீசார் அகற்றி, 'பேரிகார்டு' அமைத்தனர்.நியூ சித்தாபுதுார், சின்னசாமி நாயுடு ரோட்டில், ஐயப்பன் கோவில் அருகே ரோட்டின் நடுவே இன்ஜின் உள்ளிட்ட பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில், விலை உயர்ந்த பைக்குகள் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்துக்கும், பொதுமக்கள் நடமாடவும் இடையூறாக இருந்தது.பல நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த, 'மர்ம' வாகனங்கள் குறித்து, நேற்று நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, நேற்று காலை மாநகர போக்குவரத்து கிழக்கு பகுதி உதவி கமிஷனர் மற்றும் போலீசார் குறிப்பிட்ட இடத்தில் விசாரித்தனர். விசாரணையில், அந்த பைக்குகளை அருகே இருந்த மெக்கானிக் கடைக்காரர் நிறுத்தியிருந்தது தெரியவந்தது.சர்வீசுக்கு வரும் பைக்குகளின் பாகங்களை அகற்றி பழுது பார்ப்பதும், அதுபோன்ற வாகனங்களை அங்கு நிறுத்தியிருந்ததும் தெரிந்தது.உடனே அப்புறப்படுத்த போலீசார் அறிவுறுத்தினர். பொதுமக்கள் பயன்படுத்தும் ரோட்டில் இதுபோல் பல நாட்கள் நிறுத்தக்கூடாது என்றும் எச்சரித்தனர்.இதையடுத்து அனைத்து வாகனங்களும் அங்கிருந்து எடுக்கப்பட்டன. அந்த இடத்தில் போலீசார் 'பேரிகார்டு' அமைத்தனர்.போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'பல நாட்களாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், குறிப்பிட்ட கடை உரிமையாளரிடம் சொல்லி உடனே அகற்றப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக எந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தினாலும், பறிமுதல் செய்யப்படும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X