பொது செய்தி

தமிழ்நாடு

இன்று ஆசிரியர் பயிற்றுனர் கலந்தாய்வு

Added : செப் 15, 2021
Share
Advertisement
கோவை:பணி மூப்பு அடிப்படையில், ஆசிரியர் பயிற்றுனர்கள், பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு இன்று, ஆன்லைன் மூலம் நடக்கிறது.தமிழகம் முழுக்க, 500 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களில், பணி மூப்பு அடிப்படையில், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது. தகுதியானவர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், இன்று நடக்கும் கலந்தாய்வில், எந்த

கோவை:பணி மூப்பு அடிப்படையில், ஆசிரியர் பயிற்றுனர்கள், பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு இன்று, ஆன்லைன் மூலம் நடக்கிறது.தமிழகம் முழுக்க, 500 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களில், பணி மூப்பு அடிப்படையில், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது. தகுதியானவர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், இன்று நடக்கும் கலந்தாய்வில், எந்த பிரச்னைகளும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.குறிப்பாக, மாலை 6:00 மணிக்கு மேல், கலந்தாய்வு தொடருவதாக இருந்தால், அடிப்படை வசதிகள் உறுதி செய்ய வேண்டும். வரும் 20ம் தேதி நடக்கும், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு, விண்ணப்பிக்கும் முறை குறித்த விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.இதை முறையாக பின்பற்றி, கலந்தாய்வில் பங்கேற்குமாறு, ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X