வெளி மாநில மாணவர்களுக்கு கோவை மாநகராட்சி புது உத்தரவு| Dinamalar

வெளி மாநில மாணவர்களுக்கு கோவை மாநகராட்சி புது உத்தரவு

Added : செப் 15, 2021 | |
கோவை:வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் கல்லுாரி மாணவர்கள், இரு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என, மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பு, கோவையில் தொடர்ந்து இருந்து வருகிறது. தொற்று பரவலை குறைக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து

கோவை:வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் கல்லுாரி மாணவர்கள், இரு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என, மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பு, கோவையில் தொடர்ந்து இருந்து வருகிறது. தொற்று பரவலை குறைக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கேரளாவில் இருந்து வரும் கல்லுாரி மாணவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறியதாவது:மாநகராட்சி பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த, பல மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு படிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.கோவையில் உள்ள கல்லுாரிகளுக்கு வெளிமாநிலத்திலிருந்து வந்து விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் இரு தவணை தடுப்பூசிகளையும் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.அதேபோல், வெளிமாநிலத்திலிருந்து விடுதிக்கு வந்தவுடன் குறைந்தபட்சம், 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தனிமைப்படுத்திக் கொள்ளாமல், நேரடியாக விடுதியில் சேர்க்கப்பட்டால், கல்லுாரி நிர்வாகத்தினர் மீது அபராதம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X