மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

Added : செப் 15, 2021
Share
கோவை,:மாற்றுத்திறனாளிகளுக்கான யு.டி.ஐ.டி., ஆவணங்களை பெறுவதற்கு, சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.மாற்றுத்திறனாளிகளுக்கு, தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.இவ்விண்ணப்பங்களை பதிவேற்றி அடையாள அட்டை வழங்க, விபரங்களை

கோவை,:மாற்றுத்திறனாளிகளுக்கான யு.டி.ஐ.டி., ஆவணங்களை பெறுவதற்கு, சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.மாற்றுத்திறனாளிகளுக்கு, தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.இவ்விண்ணப்பங்களை பதிவேற்றி அடையாள அட்டை வழங்க, விபரங்களை சரிபார்த்த போது, ஆவணங்கள் தெளிவின்மை காரணமாக ஒரு சிலருக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை.தெளிவான ஆவணங்களை பெற்று, அடையாள அட்டை வழங்க துறை சார்பில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கான சிறப்பு முகாம், நாளை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில், காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்க உள்ளது. அடையாள அட்டைக்காக விண்ணப்பித்து கிடைக்காதவர்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையின் அனைத்து பக்கங்கள், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஆகியவற்றின் தெளிவான நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கையொப்பம் அல்லது கைரேகை, ஆகியவற்றை முகாம் நடக்கும் இடங்களில் வழங்கலாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X