பன்னீர்செல்வம், பழனிசாமி மீதான வழக்கு விசாரணை தள்ளி வைப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பன்னீர்செல்வம், பழனிசாமி மீதான வழக்கு விசாரணை தள்ளி வைப்பு

Added : செப் 15, 2021
Share
சென்னை:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மீதான அவதுாறு வழக்கு விசாரணையை, அக்டோபர் 6க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.அ.தி.மு.க., செய்தி தொடர்பாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. இவரை ஜூன் 14ல் கட்சியில் இருந்து நீக்கி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவரும் கூட்டறிக்கை

சென்னை:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மீதான அவதுாறு வழக்கு விசாரணையை, அக்டோபர் 6க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. இவரை ஜூன் 14ல் கட்சியில் இருந்து நீக்கி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், கட்சி விரோத செயல்பாடுகளுக்கு காரணமாக இருந்ததால் நீக்கம் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த காரணம், தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரையும் அவதுாறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக்கோரி, சென்னையில் எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் இருவரையும் ஆஜராக உத்தரவிட்டு, சென்னை சிறப்பு நீதிமன்றம் 'சம்மன்' அனுப்பியது.

இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடரலாம் என்றும், இருவரும் ஆஜராக விலக்கு அளித்தும், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை, நீதிபதி என்.ஆலிசியா முன்விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றத்தில் விலக்கு பெற்றதால், பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் ஆஜராகவில்லை. அதனால் அக்., 6க்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X