குன்னுாரில் வவ்வால்: 'நிபா' அச்சத்தில் மக்கள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
குன்னுார்,:குன்னுார் வெலிங்டனில் உள்ள மரங்களில், 500க்கும் மேற்பட்ட வவ்வால்கள் காணப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார் வெலிங்டன் அருகே உள்ள மரங்களில், கடந்த, 3 மாதங்களாக, 500க்கும் மேற்பட்ட வவ்வால்கள் முகாமிட்டுள்ளன. இதே பகுதியில் கொய்யா உட்பட பல்வேறு பழங்களை உணவாக உட்கொள்கின்றன.தற்போது, கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவி வரும் நிலையில், இப்பகுதி மக்கள்

குன்னுார்,:குன்னுார் வெலிங்டனில் உள்ள மரங்களில், 500க்கும் மேற்பட்ட வவ்வால்கள் காணப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார் வெலிங்டன் அருகே உள்ள மரங்களில், கடந்த, 3 மாதங்களாக, 500க்கும் மேற்பட்ட வவ்வால்கள் முகாமிட்டுள்ளன. இதே பகுதியில் கொய்யா உட்பட பல்வேறு பழங்களை உணவாக உட்கொள்கின்றன.தற்போது, கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவி வரும் நிலையில், இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார் வட்டார மருத்துவ அலுவலர் ஹாஜிரா பேகம் கூறுகையில்,''நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவும். இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள பழ மரங்களை கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.அரசு மருத்துவமனை சித்தா மருத்துவர் நிவேதப்பிரியா கூறுகையில்,''வவ்வால், அணில் போன்றவை கடித்த பழங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். பழங்களை வாங்கியதும் நன்றாக கழுவி உட்கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X