அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஹிந்தியை பயன்படுத்த கட்டாயப்படுத்தக் கூடாது'

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை:'தாய்மொழியுடன் ஹிந்தியையும் பயன்படுத்த கட்டாயப்படுத்தக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான ஹிந்தியுடன், தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான், நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.தவறில்லைஇது மறைமுகமாகஹிந்தியை
 'ஹிந்தியை பயன்படுத்த  கட்டாயப்படுத்தக் கூடாது'

சென்னை:'தாய்மொழியுடன் ஹிந்தியையும் பயன்படுத்த கட்டாயப்படுத்தக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:

இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான ஹிந்தியுடன், தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான், நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.


தவறில்லை



இது மறைமுகமாகஹிந்தியை திணிக்கும் செயல். ஹிந்தி திவாஸ் நாளில், ஹிந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை. ஆனால், ஹிந்தியை பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் எனக் கூறுவதில், ஏராளமான பொருட்கள் மறைந்து கிடக்கின்றன. அது தவறு; அவ்வாறு கூறக் கூடாது.

தமிழ் உள்ளிட்ட, எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கிறது. அக்கோரிக்கையை உடனே நிறைவேற்றி, மொழி சமநிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணியின் அறிக்கை:தமிழகத்தில் 'நீட்' தேர்வு, இரண்டு நாட்கள் இடைவெளியில் இரு மாணவர்களை பலி கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில், அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்தது, பெரும் வேதனையை அளிக்கிறது.


நடவடிக்கை

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் புதிய சட்ட முன்வரைவை, ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெற, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஓரிரு மாதங்களில் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று, தமிழகத்தில் நீட் தேர்வு இனி இல்லை என்ற அறிவிப்பை மாநில அரசு வெளியிட வேண்டும்.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X