பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கைக்கு கிடைத்தது தீர்வு: மாணவர்கள் போராட்டம் வாபஸ்

Added : செப் 15, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்ததால், பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலை, நான்காண்டு பட்டுப்புழுவியல் துறை பட்டப்படிப்பு வகுப்புகளை துவக்கியது. சில ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், இந்த வகுப்புகள் செயல்படுகின்றன. இந்நிலையில், வேளாண் பல்கலை நிர்வாகம்,
 கோரிக்கைக்கு கிடைத்தது தீர்வு: மாணவர்கள் போராட்டம் வாபஸ்

மேட்டுப்பாளையம்:கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்ததால், பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலை, நான்காண்டு பட்டுப்புழுவியல் துறை பட்டப்படிப்பு வகுப்புகளை துவக்கியது. சில ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், இந்த வகுப்புகள் செயல்படுகின்றன. இந்நிலையில், வேளாண் பல்கலை நிர்வாகம், இரண்டு ஆண்டுகளுக்கு, பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.பட்டுப்புழுவியல் துறை மாணவ, மாணவியர், பல்கலை நிர்வாகம் அறிவித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இத்துறைக்கென தனியாக கல்லுாரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, 7வது நாளாக தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து, போராட்டம் செய்து வந்தனர். இந்நிலையில், வேளாண் பல்கலை பட்டுப்புழுவியல் துறை 'டீன்' கல்யாணசுந்தரம், நேற்று மாலை மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி ஆராய்ச்சி நிலைய 'டீன்' பார்த்திபன் முன்னிலையில், தாசில்தார் ஷர்மிளா, டி.எஸ்.பி., ஜெய்சிங் ஆகியோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.முடிவில், நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும் என அறிவித்ததை அடுத்து, மாணவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X