இடியும் நிலையில் நிழற்கூரை: பஸ்சுக்கு காத்திருக்க முடியல...

Added : செப் 15, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:'பெரியநாயக்கன்பாளையம் அருகே இடியும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்கூரையை சீரமைக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே, கூடலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட கூடலுார் கவுண்டம்பாளையத்தில் விஜயலட்சுமி நகர் அருகே, பயணிகள் நிழற்கூரை உள்ளது. அதிகளவு குடியிருப்பு உள்ள இப்பகுதியில், கோவை செல்ல பயணிகள் பஸ்சுக்காக
 இடியும் நிலையில் நிழற்கூரை: பஸ்சுக்கு காத்திருக்க முடியல...

பெ.நா.பாளையம்:'பெரியநாயக்கன்பாளையம் அருகே இடியும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்கூரையை சீரமைக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே, கூடலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட கூடலுார் கவுண்டம்பாளையத்தில் விஜயலட்சுமி நகர் அருகே, பயணிகள் நிழற்கூரை உள்ளது. அதிகளவு குடியிருப்பு உள்ள இப்பகுதியில், கோவை செல்ல பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்க இது உதவியது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நிழற்கூரைக்கு எதிரே டாஸ்மாக் கடை இருந்ததால், போதை ஆசாமிகள் இதற்குள் படுத்துறங்கினர். இதனால் நிழற்கூரையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.பொது மக்களின் போராட்டம், மாவட்ட நிர்வாகத்திற்கு மனுக்கள் அளித்ததால், டாஸ்மாக் கடை, கூடலுார் கவுண்டம்பாளையம் மயானம் அருகே மாற்றப்பட்டது. தற்போது, பராமரிப்பு இல்லாத நிலையில், இடியும் நிலையில் நிழற்கூரை உள்ளது. இதை செப்பனிட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூடலுார் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'இடியும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்கூரையை விரைவில் செப்பனிட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X