தரிசு நிலங்களில் மாற்றம்: அதுக்கும் இருக்குது மானியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தரிசு நிலங்களில் மாற்றம்: அதுக்கும் இருக்குது மானியம்

Added : செப் 15, 2021
Share
அன்னுார்:'தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற மானியம் வழங்கப்படுகிறது' என, பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது.அக்கரை செங்கப்பள்ளியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் என்னும் தலைப்பில், விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும்

அன்னுார்:'தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற மானியம் வழங்கப்படுகிறது' என, பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது.அக்கரை செங்கப்பள்ளியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் என்னும் தலைப்பில், விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். ஓய்வுபெற்ற துணை இயக்குனர் மோகன்ராஜ் சாமுவேல் பேசியதாவது:மானாவாரியாக நீண்ட நாட்கள் இருக்கக்கூடிய நிலங்களை விளை நிலங்களாக மாற்றியமைக்க வேண்டும். மேலும் கோடை உழவு மேற்கொள்ளும் மண்ணில், நுண்ணுயிர்கள் பெருகும். மண்ணில் தன்மைக்கு ஏற்ப தக்க தருணத்தில் சோளம் மற்றும் பயறு வகைகளை பயிரிடுவதன் வாயிலாக, அதிக வருமானம் பெறலாம். தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற மானியம் வழங்கப்படுகிறது. இத்தகைய நிலங்களில் பயிரிட தேவையான சோள விதை, பயறு விதை, உரங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.துணை வேளாண் அலுவலர் முருகன் பேசுகையில், ''கோடை உழவு செய்யவும், நுண்ணுயிர் உரங்கள் வாங்கவும் மானியம் வழங்கப்படுகிறது,'' என்றார்.உதவி வேளாண் அலுவலர் கவிதா, உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு, தினகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X