பொது செய்தி

தமிழ்நாடு

'வேலை'க்கு போக எப்போது வருமோ 'வேளை!' இரண்டு மாதமா கைக்கு வரவில்லை சான்று

Added : செப் 15, 2021
Share
Advertisement
அன்னுார்:தடுப்பூசி போட்டு இரண்டு மாதங்களாகியும் சான்று வராததால், தொழிலாளர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.அன்னுார் வட்டாரத்தில், ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். கடந்த ஆறு மாதங்களாக, தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. 55 சதவீதம் பேருக்கு முதல் டோஸ், 15 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. பல ஊர்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, சான்று

அன்னுார்:தடுப்பூசி போட்டு இரண்டு மாதங்களாகியும் சான்று வராததால், தொழிலாளர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.அன்னுார் வட்டாரத்தில், ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். கடந்த ஆறு மாதங்களாக, தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. 55 சதவீதம் பேருக்கு முதல் டோஸ், 15 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. பல ஊர்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, சான்று வரவில்லை என புகார் எழுந்துள்ளது.கெம்பநாயக்கன்பாளையம் பொதுமக்கள் கூறியதாவது:எங்கள் ஊர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஜூலை மாதம் சிறப்பு முகாம் நடந்தது. அப்போது, 300க்கு மேற்பட்டோரும், ஆகஸ்ட் மாதம் நடந்த முகாமில், 400க்கும் மேற்பட்டோரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஆனால் தடுப்பூசி போட்டு இரண்டு மாதங்களாகியும், இதுவரை சான்று வரவில்லை. இதுகுறித்து பள்ளியில் கேட்டால் எங்களுக்கு தெரியாது; பொகலுார் மருத்துவமனை சென்று கேளுங்கள் என்கின்றனர்.காரே கவுண்டன்பாளையம், கரியாம்பாளையம், குப்பேபாளையம் ஊராட்சிகளில் உள்ள தொழிற்சாலைகளில், தடுப்பூசி போட்ட சான்று இருந்தால் மட்டுமே வேலைக்கு வர அனுமதிக்கின்றனர். சான்று இல்லாவிட்டால் சான்று வந்த பின்தான் வேலைக்கு வரவேண்டும் என திருப்பி அனுப்புகின்றனர். எனவே, விரைவில் தடுப்பூசி சான்று கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.இதேபோல், நாகம்மாபுதுார் மக்கள் தடுப்பூசி போட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது; இதுவரை சான்று வரவில்லை என தெரிவித்தனர். பல ஊர்களிலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மாதக்கணக்கில் சான்று வராமல் உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள், பள்ளிகளில் முகாம் நடத்தும் போது, அந்தப் பள்ளியிலேயே கணினி பயிற்சி பெற்ற ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளனர்; அவர்களை பயன்படுத்தி உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்யலாம்.தொற்று பரிசோதனை செய்தால், ஒரு மணி நேரத்திலேயே உங்களுக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என, குறுந்தகவல் வருகிறது. ஆனால், தடுப்பூசி போட்டு இரண்டு மாதம் ஆனாலும் சான்று வருவதில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால், மக்களுக்கு பயனாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X