வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று வேட்பு மனு தாக்கல்

Added : செப் 15, 2021
Share
கோவில்பாளையம்:கள்ளிப்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், கள்ளிப்பாளையம் ஊராட்சியில், 5வது வார்டு உறுப்பினராக இருந்த, அ.தி.மு.க., வின் துளசியம்மாள், கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பால் இறந்தார். அந்த வார்டு உறுப்பினர் பதவி காலியானது. வரும் 9ம் தேதி, இப்பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.நேற்று

கோவில்பாளையம்:கள்ளிப்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், கள்ளிப்பாளையம் ஊராட்சியில், 5வது வார்டு உறுப்பினராக இருந்த, அ.தி.மு.க., வின் துளசியம்மாள், கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பால் இறந்தார். அந்த வார்டு உறுப்பினர் பதவி காலியானது. வரும் 9ம் தேதி, இப்பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. கள்ளிப்பாளையம் ஊராட்சியில் புதிய பணிகள் துவக்கக் கூடாது; விழாக்கள் நடத்தக் கூடாது; நலத்திட்ட உதவிகள் வழங்க கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, கள்ளிப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. ஐந்தாவது வார்டில், 134 ஆண், 154 பெண் என, 288 வாக்காளர்கள் உள்ளனர்.தேர்தல் நடத்தும் அலுவலராக, எஸ்.எஸ்., குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ருக்சானா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கள்ளிப்பாளையம் துவக்கப்பள்ளி வளாகத்தில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X