பொது செய்தி

தமிழ்நாடு

சோதனை ஓட்டம்: வேதனை ஓட்டம்?

Added : செப் 15, 2021
Share
Advertisement
அன்னுார்:கூட்டு குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையம் பேரூராட்சிகள் மற்றும் சூலுார் விமானப்படைத்தள குடியிருப்பு உட்பட, 7 பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்க, 241 கோடி மதிப்பில், கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் இரு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. சிறுமுகை அருகே பவானி ஆற்றில் நீர் எடுக்கப்பட்டு, அன்னுார் வரும் வழியில்

அன்னுார்:கூட்டு குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையம் பேரூராட்சிகள் மற்றும் சூலுார் விமானப்படைத்தள குடியிருப்பு உட்பட, 7 பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்க, 241 கோடி மதிப்பில், கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் இரு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. சிறுமுகை அருகே பவானி ஆற்றில் நீர் எடுக்கப்பட்டு, அன்னுார் வரும் வழியில் சுமைதாங்கியில் நீர் தேக்கி வைக்கப்பட்டு நீர் உந்தப்படுகிறது. இதில், 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. குழாய் பாதிக்கப்பட்ட இடங்களில் நீரை செலுத்தி கசிவு உள்ளதா, அழுத்தம் தாங்குகிறதா என்று பரிசோதிக்கும் பணி, இரு நாட்களாக நடக்கிறது. சுமைதாங்கி, வடக்கலுார் மற்றும் அன்னுார் வரும் வழியில் குழாய்களில் நீர் விட்டு சோதனை செய்து வருகின்றனர்.அன்னுார் பேரூராட்சியில், 12 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மக்கள் பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர். கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்தால், பேரூராட்சிக்கு தினமும், 35 லட்சம் லிட்டர் கிடைக்கும் என்பதால், மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X