நிழல் முதல்வராக உதயநிதி உள்ளார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நிழல் முதல்வராக உதயநிதி உள்ளார்'

Added : செப் 15, 2021
Share
சென்னை:''நீட் விவகாரத்தில் மாணவர்களையும், மக்களையும் தி.மு.க., குழப்புகிறது. உதயநிதி நிழல் முதல்வராக உள்ளார்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார் ஆகியோர், பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின்,

சென்னை:''நீட் விவகாரத்தில் மாணவர்களையும், மக்களையும் தி.மு.க., குழப்புகிறது. உதயநிதி நிழல் முதல்வராக உள்ளார்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார் ஆகியோர், பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பின், ஜெயகுமார் அளித்த பேட்டி:நீட் விவகாரத்தில் தி.மு.க.,வின் தவறான வழி காட்டுதல் காரணமாக, மாணவர் தனுஷ் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க., பொறுப்பேற்க வேண்டும்.தி.மு.க.,வின் வாரிசு அரசியல், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் நியமனத்தில் நிதர்சனமாக தெரிகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், உதயநிதிக்கு அமைச்சர் பதவி கூட கொடுப்பர். இன்று நிழல் முதல்வராக உதயநிதி உள்ளார்.

எப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தினாலும், அதை சந்திக்க அ.தி.மு.க., தயாராக உள்ளது. ஒரு கட்ட தேர்தல் முடிந்த பின், அடுத்த கட்ட தேர்தலில், ஆளும் கட்சி ஆட்களை வைத்து கள்ள ஓட்டு போட வாய்ப்பு அதிகம்.இதை தடுக்க, அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X