பொது செய்தி

தமிழ்நாடு

புறநகர் பகுதி தியேட்டர்களில்...அரங்கு 'குறைந்த' காட்சிகள்!பார்வையாளர்கள் வருகை குறைவு

Added : செப் 15, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:'கோவை புறநகர் பகுதிகளில், கோவிட் தொற்று இரண்டாம் அலைக்கு பின் திறக்கப்பட்ட சினிமா தியேட்டர்களில், பார்வையாளர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளது' என, தியேட்டர் மேலாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.கோவையில், கோவிட் முதல் அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. தொற்று பாதிப்பு குறைந்ததால், கடந்த ஜன., மாதம், 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்பட

பெ.நா.பாளையம்:'கோவை புறநகர் பகுதிகளில், கோவிட் தொற்று இரண்டாம் அலைக்கு பின் திறக்கப்பட்ட சினிமா தியேட்டர்களில், பார்வையாளர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளது' என, தியேட்டர் மேலாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.கோவையில், கோவிட் முதல் அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. தொற்று பாதிப்பு குறைந்ததால், கடந்த ஜன., மாதம், 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஏப்., வரை செயல்பட்ட நிலையில், இரண்டாவது அலையால் மீண்டும் மூடப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் தொற்று பரவல் விகிதம் குறைந்ததால், கடந்த 23ம் தேதி முதல் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.மகிழ்ச்சியடைந்த தியேட்டர் உரிமையாளர்கள், தியேட்டர் வளாகங்களை கிருமிநாசினியால் சுத்தப்படுத்தினர். 50 சதவீதம் பார்வையாளர்கள் அமரும் வகையில், இருக்கைகளில் கயிறு கட்டுதல், குறியீடு வரைதல் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தியேட்டர் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.தியேட்டர்கள் திறக்கப்பட்டு, 20 நாட்களுக்கு மேலாகியும் பார்வையாளர்கள், தியேட்டருக்கு வருவது வெகு குறைவாக உள்ளது. இதனால் லாபம் ஏதும் இல்லாமல் நஷ்டத்தில் தியேட்டர் இயக்கப்பட்டு வருவதாக தியேட்டர் மேலாளர்கள் தெரிவிக்கின்றனர்.அன்னுார் ஆனந்தா தியேட்டர் மேலாளர் பாபு கூறியதாவது:நகர்ப்புறங்களில் செயல்படும் 'மல்டிபிளக்ஸ்' தியேட்டர்களில் பார்வையாளர்கள் வருகை திருப்திகரமாக உள்ளது. ஆனால், புறநகர் பகுதிகளில் மிகவும் குறைவாக உள்ளது. கவுண்டம்பாளையம், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உட்பட பகுதிகளில், 600 முதல், 800 இருக்கைகள் கொண்ட தியேட்டர்களில், ஒரு காட்சிக்கு, 10 முதல், 20 நபர்களே வருகின்றனர்.கோவிட் தொற்று வந்து விடுமோ என்ற பயமும், தியேட்டருக்கு மக்கள் வராதது ஒரு காரணம். மேலும், 'ஸ்டார் வேல்யூ' உள்ள திரைப்படங்கள், 20 நாட்களாக தியேட்டர்களுக்கு வரவில்லை. இதுபோன்ற காரணங்களால், பார்வையாளர்களின் வருகை குறைவாக உள்ளது. தியேட்டர்களை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்ட காலங்களில் ஏராளமான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். இப்பிரச்னையில் இருந்து மீளும் வரை தியேட்டர்களுக்கு விதிக்கப்படும் வரி மற்றும் கேளிக்கை வரி உள்ளிட்டவைகளிலிருந்து, தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X