பொது செய்தி

தமிழ்நாடு

தார் சாலை; அதிகாரிகள் ஆய்வு

Added : செப் 15, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மருதுார் ஊராட்சியில், ரூ.2.15 கோடி மதிப்பில் போடப்பட்ட தார் சாலையை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.காரமடை அடுத்த மருதுார் ஊராட்சியில், பிரதான் மந்திரி கிராமம் சதக் யோஜனா திட்டத்தில், தண்டி பெருமாள் கோவில் முதல், மலையப்பகவுண்டன் புதுார் சாலை வரை, மூன்று கி.மீ.,க்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 2.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
 தார் சாலை; அதிகாரிகள் ஆய்வு

மேட்டுப்பாளையம்:மருதுார் ஊராட்சியில், ரூ.2.15 கோடி மதிப்பில் போடப்பட்ட தார் சாலையை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.காரமடை அடுத்த மருதுார் ஊராட்சியில், பிரதான் மந்திரி கிராமம் சதக் யோஜனா திட்டத்தில், தண்டி பெருமாள் கோவில் முதல், மலையப்பகவுண்டன் புதுார் சாலை வரை, மூன்று கி.மீ.,க்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 2.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலையில், ஏழு சிறு பாலங்கள், 40 மீட்டருக்கு தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.இதை காரமடை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சாலையில் தார் தளம், 20 மில்லி மீட்டர் கனம் அளவுக்கு இருக்க வேண்டும் என, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாலை பணிகள் நடைபெறும் போது காரமடை ஊராட்சி ஒன்றிய ஓவர்சீர் சந்திரசேகர், ரோடு இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.தார் சாலையால், கணுவாய்பாளையம், தண்டி பெருமாள்புரம், பெட்டதம்மன் குடியிருப்பு, மலையப்ப கவுண்டன் புதுார் ஆகிய கிராம மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். ஆய்வில், ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X