பறக்கும் சிமென்ட் துகள்: வாகன ஓட்டிகள் அவதி| Dinamalar

பறக்கும் சிமென்ட் துகள்: வாகன ஓட்டிகள் அவதி

Added : செப் 15, 2021
Share
சூலூர்,:தார்ப்பாய் போட்டு மூடாமல், வாகனங்களில் சிமென்ட் லோடு ஏற்றி செல்வதால், பறக்கும் துகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.சூலுார் அடுத்த இருகூரில் உள்ள கூட்செட்டுக்கு, ரயில்கள் வாயிலாக சிமென்ட் மூட்டைகள் கொண்டு வரப்படுகின்றன. அவை லாரிகள், டிராக்டர்கள் மற்றும் டெம்போக்களில் ஏற்றப்பட்டு தனியார் குடோன்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு இருப்பு வைத்து,
 பறக்கும் சிமென்ட் துகள்:  வாகன ஓட்டிகள் அவதி

சூலூர்,:தார்ப்பாய் போட்டு மூடாமல், வாகனங்களில் சிமென்ட் லோடு ஏற்றி செல்வதால், பறக்கும் துகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.சூலுார் அடுத்த இருகூரில் உள்ள கூட்செட்டுக்கு, ரயில்கள் வாயிலாக சிமென்ட் மூட்டைகள் கொண்டு வரப்படுகின்றன. அவை லாரிகள், டிராக்டர்கள் மற்றும் டெம்போக்களில் ஏற்றப்பட்டு தனியார் குடோன்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு இருப்பு வைத்து, வினியோகஸ்தர்களுக்கும், சிமென்ட் கடைகளுக்கும் அனுப்பப்படுகின்றன.இந்நிலையில், ரயிலில் இருந்து வாகனங்களில் ஏற்றப்படும் மூட்டைகள் மீது, தார்பாய் போட்டு மூடாமல் சாலைகளில் செல்வதால், சிமென்ட் துகள் காற்றில் பறக்கிறது. இதனால், பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், வாகனங்களை இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.வாகன ஓட்டிகள் கூறுகையில், 'விதிகளை மீறி தார்ப்பாய் போட்டு மூடாமல், சிமென்ட் மூட்டைகளை வாகனங்களில் ஏற்றி வருகின்றனர். இதனால், இருகூர் சாலைகளில் சிமென்ட் துகள்கள் காற்றில் கலந்து பறக்கின்றன. இதனால், வண்டி ஓட்டுபவர்கள், நடந்து செல்பவர்கள் கண்கள் குளமாகின்றன. சுவாசிக்க முடியவில்லை. விதிமீறும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X