பயிர் கழிவு மேலாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் கழிவு மேலாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி

Added : செப் 15, 2021
Share
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன் பாளையம் அருகே குருடம்பாளையம் கிராமத்தில், பயிர் கழிவு மேலாண்மை குறித்து, விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 'அட்மா' திட்டத்தின் சார்பாக, உள் மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா தலைமை வகித்தார். விவசாயிகள்,

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன் பாளையம் அருகே குருடம்பாளையம் கிராமத்தில், பயிர் கழிவு மேலாண்மை குறித்து, விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 'அட்மா' திட்டத்தின் சார்பாக, உள் மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா தலைமை வகித்தார். விவசாயிகள், பண்ணையில் உள்ள பயிர்க் கழிவுகளை விவசாயத்துக்கு தேவையான உரமாக மாற்றுதல், செயற்கை மருந்துகளை அளவான முறையில் பயன்படுத்துதல், மண்வளம் காத்தல், பயிர்களில் நோய், பூச்சி மேலாண்மை, பயிர்க் கழிவுகளை நன்மை பயக்கும் உயிரிகளை பயன்படுத்தி உரமாக மாற்றுதல் குறித்து விளக்கப்பட்டது.வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி, வேளாண்துறை திட்டங்கள் குறித்து கூறினார். வேளாண் உதவி அலுவலர்கள் அனுராதா, ரமேஷ், சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, 'அட்மா' திட்ட அலுவலர்கள் தங்கமணி, புனிதா ஆகியோர் மேற்கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X