எங்க ஊர் பிரச்னையை முதல்ல கவனிங்க...! கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எங்க ஊர் பிரச்னையை முதல்ல கவனிங்க...! கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை

Added : செப் 15, 2021
Share
சூலுார்:''எங்கள் ஊரை, ஒரே ஊராட்சியின் கீழ் கொண்டு வரவில்லை எனில், கோர்ட்டில் வழக்கு தொடர்வதை தவிர வேறு வழியில்லை,"என, பொன்னாண்டாம்பாளையம் கிராம மக்கள் கூறினர்.சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, பொன்னாண்டாம்பாளையம் கிராமம். 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஊரின் கிழக்குப் பகுதி கணியூர் ஊராட்சியின் கீழும், தெற்கு பகுதி அரசூர் ஊராட்சியின் கீழும், வடக்கு

சூலுார்:''எங்கள் ஊரை, ஒரே ஊராட்சியின் கீழ் கொண்டு வரவில்லை எனில், கோர்ட்டில் வழக்கு தொடர்வதை தவிர வேறு வழியில்லை,"என, பொன்னாண்டாம்பாளையம் கிராம மக்கள் கூறினர்.சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, பொன்னாண்டாம்பாளையம் கிராமம். 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஊரின் கிழக்குப் பகுதி கணியூர் ஊராட்சியின் கீழும், தெற்கு பகுதி அரசூர் ஊராட்சியின் கீழும், வடக்கு பகுதி மோப்பிரிபாளையம் பேரூராட்சியின் கீழும், மேற்கு பகுதி, அன்னுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாராணபுரத்தின் கீழும் வருகின்றன. இதனால், அடிப்படை வசதிகள் செய்வதில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு இடையூறு தொடர்கிறது. மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில், பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஒரே ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் தங்கள் ஊரை கொண்டு வரக்கோரி, ஊர்மக்கள் பல போராட்டங்களை நடத்தினர்; இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.கணியூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் சிவக்குமார் கூறியதாவது:ஒரே ஊராட்சியின் கீழ் எங்கள் ஊரை கொண்டு வர, அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் 2014ல் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த கோர்ட், ஒரே ஊராட்சியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, இருமுறை ஊர் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.கடந்த, 2016ல் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் கள ஆய்வு மேற்கொண்டு, ஒரே ஊராட்சியின் கீழ் இணைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், கணியூர் ஊராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் கருமத்தம்பட்டியுடன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகி, அது தொடர்பான கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.கருமத்தம்பட்டியுடன் இணைக்கப்பட்டால், எங்கள் ஊர் பிரச்னை தொடரும். அதனால், எங்கள் ஊர் மக்களின் பல்லாண்டு கால கோரிக்கைக்கு தீர்வு கண்டு விட்டு, நகராட்சியுடன் இணைக்கும் முடிவை அரசு செயல்படுத்தட்டும். இல்லையென்றால், மீண்டும் கோர்ட்டில் முறையிடுவதை தவிர வேறுவழியில்லை. இதுகுறித்து, கலெக்டரிடம் நேற்று மனு அளித்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X