பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தி எதிரொலி மீண்டும் செயல்படும் சிக்னல்கள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : தினமலர் செய்தி எதிரொலியாக நகரில் போக்குவரத்து சிக்னல்கள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு செயல்பட துவங்கி உள்ளன.திண்டுக்கல் நகரில் சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். அதற்கேற்றாற்போல் பெரும்பாலான சிக்னல்களும் செயல்படவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதனையடுத்து எஸ்.பி.,
 தினமலர் செய்தி எதிரொலி மீண்டும் செயல்படும் சிக்னல்கள்

திண்டுக்கல் : தினமலர் செய்தி எதிரொலியாக நகரில் போக்குவரத்து சிக்னல்கள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு செயல்பட துவங்கி உள்ளன.

திண்டுக்கல் நகரில் சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். அதற்கேற்றாற்போல் பெரும்பாலான சிக்னல்களும் செயல்படவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதனையடுத்து எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரலாதன் தலைமையில் போலீசார் சிக்னல்களை ஆய்வு செய்து சரிசெய்தனர். அதோடு சிக்னல்கள் இல்லாத இடங்களில் போலீசாரை நியமித்து, நெரிசல் ஏற்படாமல் கண்காணித்து வருகின்றனர்.சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு வணிக வளாகங்களுக்குச் செல்வது, சாலை விதிகளை புறக்கணிப்பது போன்றவற்றால் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போலீசாரோடு பொதுமக்களும் ஒத்துழைத்தால்தான் நெரிசலை தவிர்க்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X