சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 வயது சிறுவனை கொன்ற சிறுவர்கள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சிவகாசி:சிவகாசியில் 4 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த இரண்டு சிறுவர்கள், போலீசாரிடம் சிக்கினர்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி விஸ்வநத்தத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 30; பட்டாசு ஆலையில் வேன் டிரைவர். இவருக்கு பிரியதர்ஷன், 8; தீனதயாளன், 4, என இரு மகன்கள். நேற்று முன்தினம் மதியம் 3:00 மணி முதல் தீனதயாளனை காணவில்லை. பார்த்திபன், சிவகாசி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

சிவகாசி:சிவகாசியில் 4 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த இரண்டு சிறுவர்கள், போலீசாரிடம் சிக்கினர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி விஸ்வநத்தத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 30; பட்டாசு ஆலையில் வேன் டிரைவர். இவருக்கு பிரியதர்ஷன், 8; தீனதயாளன், 4, என இரு மகன்கள். நேற்று முன்தினம் மதியம் 3:00 மணி முதல் தீனதயாளனை காணவில்லை. பார்த்திபன், சிவகாசி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, தீனதயாளனை பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அல்போன்சாவின் 13 வயது பேரன், அவனது நண்பன் 11 வயது சிறுவன் இருவரும் அழைத்துச் சென்றது தெரிந்தது. விசாரித்தபோது, தீனதயாளனை கிணற்றில் தள்ளி கொன்றதாக தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் காலை, அல்போன்சாவின் வீட்டின் முன் கொட்டப்பட்டிருந்த மணலில் தீனதயாளன் விளையாடி உள்ளார். இதை, அல்போன்சா கண்டித்துள்ளார். இதில், அவருக்கும், தீனதயாளனின் பாட்டி லட்சுமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன், அல்போன்சாவின் பேரனை லட்சுமி திட்டியுள்ளார். இதை மனதில் வைத்து அந்த சிறுவன், 11 வயது நண்பனுடன் சேர்ந்து, தீனதயாளனை கிணற்றில் தள்ளி கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X