தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தாதவர் யார் 'தேடுகிறது' மாநகராட்சி

Added : செப் 15, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : வாக்காளர் பட்டியல் அடிப்படையில், திண்டுக்கல் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்களை தேடும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா 3 ம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
 தடுப்பூசி செலுத்தாதவர் யார்  'தேடுகிறது' மாநகராட்சி

திண்டுக்கல் : வாக்காளர் பட்டியல் அடிப்படையில், திண்டுக்கல் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்களை தேடும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா 3 ம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். செப்.12 ல் மெகா தடுப்பூசி முகாம் மூலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 72 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சியை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநகராட்சியாக மாற்ற கலெக்டர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.கமிஷனர் சிவசுப்பிரமணியன் அறிவுரையின் பேரில், சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் 2.25 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ளோரரையும் தடுப்பூசி போட வைக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர். இதற்காக வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தியவர், செலுத்தாதவர்களை தேடிப் பிடிக்க திட்டமிட்டுள்ளனர். இப் பணியில் நகரமைப்பு, சுகாதாரம், வருவாய் துறை அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X