செய்திகள் சில வரிகளில்... 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்துண்டுப்பிரசுரம் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள்துண்டுப்பிரசுரம் வினியோகம்

Added : செப் 15, 2021
Share
பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுப்பகுதியில், பொதுமக்களிடம், தமிழ்நாடு, '108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் துண்டுப்பிரசுரம் வினியோகித்தனர். ஊழியர்கள் கூறுகையில், 'பாதுகாப்பான, சுத்தமான, சுகாதாரமான பணியிட வசதி வழங்க வேண்டும். சட்டப்படி, எட்டு மணி நேர வேலை வழங்க வேண்டும். ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தனி அறை வசதி ஏற்படுத்த வேண்டும்.ஓய்வு அறை, கழிவறை வசதி;
 செய்திகள் சில வரிகளில்... '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள்துண்டுப்பிரசுரம் வினியோகம்

பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுப்பகுதியில், பொதுமக்களிடம், தமிழ்நாடு, '108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் துண்டுப்பிரசுரம் வினியோகித்தனர். ஊழியர்கள் கூறுகையில், 'பாதுகாப்பான, சுத்தமான, சுகாதாரமான பணியிட வசதி வழங்க வேண்டும். சட்டப்படி, எட்டு மணி நேர வேலை வழங்க வேண்டும்.

ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தனி அறை வசதி ஏற்படுத்த வேண்டும்.ஓய்வு அறை, கழிவறை வசதி; '108' ஆம்புலன்ஸ் நிர்வகித்து வரும், தனியார் நிறுவனத்தின் சட்டத்துக்கு புறம்பான, தொழிலாளர் விரோத போக்கை தடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.இதற்கு, பொதுமக்களிடம் போராட்டத்தின் நோக்கம் மற்றும் ஆதரவு கோரும் வகையில் துண்டுப்பிரசுரம் வினியோகிக்கப்படுகிறது,' என்றனர்.

ரோட்டோர மரம் சாய்ந்து:போக்குவரத்து பாதிப்பு

ஆனைமலை தாலுகா பகுதிகளில் கடந்த, மூன்று வாரங்களாக அதிவேக காற்றுடன் மழை பெய்கிறது. இதனால், பல இடங்களில் ரோட்டோர மரங்கள் சாய்ந்து வருகிறது. இந்நிலையில், பில்சின்னாம்பாளையம் அருகே, நேற்று அதிகாலை, வால்பாறை ரோட்டில் 'மே பிளவர்' மரம் வேரோடு சாய்ந்தது. இதையடுத்து, போலீசார், நெடுஞ்சாலைத்துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். மரம் விழுந்ததால், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இப்பகுதிகளில், 41 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்யுமென, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆனால், ரோட்டோரத்தில் வலுவிழந்த மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது.

விபத்துக்களை தவிர்க்க ரோட்டோரத்தில் உள்ள வலுவிழந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின்ரயில் பாதையில் கால்நடைமேய்ப்பதால் விபத்து அபாயம்பொள்ளாச்சியை பிற பகுதிகளுடன் இணைக்கும், ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், போத்தனுார் வழித்தடத்தில் பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டமும் நடந்துள்ளது.

ரயில் பாதையில், 15,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படுவதாகவும், ரயில் வழித்தடம் அருகில் செல்வதை ஆபத்து எனவும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.இந்நிலையில், தண்டவாளத்தில் செழித்து வளர்ந்துள்ள களைச்செடிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். உயரழுத்த மின்சாரத்தால் கால்நடைகள் தாக்கப்படலாம்; ரயில் சோதனை ஓட்டத்தின் போது அசம்பாவிதம் ஏற்படும். காப்பாற்ற முயலும் கால்நடை உரிமையாளர்களுக்கும் சிக்கல் ஏற்படும்.

மேலும், ரயில்வே மேம்பாலத்தின் மீது மேயும் கால்நடைகள் கால் தவறி கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, ரயில் தடங்களில் அத்துமீறுவோரிடையே, ரயில்வே நிர்வாகம்விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர் பிரசாரம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில்79 தீர்மானங்கள் நிறைவேற்றம் மடத்துக்குளம் ஒன்றியத்தில், ஒன்றியக்குழு தலைவர் காவியா தலைமையில் நேற்று, ஒன்றியக்குழுவின் சாதாரணக்கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

பி.டி.ஓ.,க்கள் மகேந்திரன், சாதிக் பாஷா முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஊராட்சிப்பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்வது, அனைவருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஈஸ்வரசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.இமானுவேல் சேகரன்உருவப்படத்துக்கு அஞ்சலிஇமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அவர் உருவப்படத்தை வைத்து, தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரகுப்த காந்தி, தேவேந்திர மடாதிபதி ராஜ தேவேந்திர சுவாமிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். கொழுமம், கொமரலிங்கம், ரெட்டிபாளையம், கணியூர் ஆகிய இடங்களிலும் இதேபோல நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

என்.எஸ்.எஸ்., முகாமில் கபசுர குடிநீர் வினியோகம்

மடத்துக்குளம் தாலுகா பகுதியில், உடுமலை ஜி.வி.ஜி., மகளிர் கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக, பல்வேறு செயல்பாடுகள் நடக்கிறது.தற்போது மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவி கிராமத்தில், நேற்று கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.

ஊராட்சித்தலைவர் உமாதேவி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் துாய்மைப்பணியாளர் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தொடர்ந்து துங்காவி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்த, கொரோனா தடுப்பூசி முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள், பல்வேறு உதவிகள் செய்தனர்.1
4 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில், பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம், நிறுவனத்தின் ஓய்வூதியர்கள் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் இணைந்து, பி.எஸ்.என்.எல்., அலுவலக வளாகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதற்கு, ஏ.ஐ.பி.டி.ஏ., கிளைச் செயலர் சிவசாமி தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல்.இ.யு., கிளைச் செயலர் பிரபாகரன், மாவட்ட உதவிச் செயலர் மனோகரன் முன்னிலை வகித்தனர்.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கக்கூடாது, மாத இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும், மூன்றாவது ஊதிய மாற்றத்தை உடனே அமல்படுத்த வேண்டும். 15 சதவீத நிர்ணய பலனோடு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.நேரடி நியமன ஊழியர்களுக்கு, 30 சதவீத ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும், துறை தேர்வுகளை உடனே நடத்த வேண்டும், ஊதிய தேக்க நிலையை போக்க, பதவி உயர்வுகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X