பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே கோரிக்கைகளில் கைகோ: தொழில் வர்த்தக சபைக்கு கோரிக்கை

Added : செப் 15, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியின் வளர்ச்சிக்காக, ரயில்வே சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பெறுவதில் கைகோர்க்க வேண்டும், என, ரயில் பயணிகள் நலச்சங்கம், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில், தொழில்வர்த்தக சபைக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியின் வளர்ச்சிக்காக, ரயில்வே சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பெறுவதில் கைகோர்க்க வேண்டும், என, ரயில் பயணிகள் நலச்சங்கம், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில், தொழில்வர்த்தக சபைக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை, இப்பகுதியின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதே போல், ரயில்வே சார்ந்த கோரிக்கைகளையும் தொழில்வர்த்தக சபை தரப்பில் மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே துறைக்கு வலியுறுத்த வேண்டும்.மீட்டர் கேஜ் காலத்தில் இந்த வழித்தடத்தில் இயங்கிய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். பொள்ளாச்சி, மீனாட்சிபுரம், கிணத்துக்கடவு ரயில்வே பகுதிகளை, பாலக்காடு கோட்டத்தில் இருந்து மீட்டு, மதுரை கோட்டத்தில் இணைக்க வேண்டும்.பொள்ளாச்சி - கோவை - மேட்டுப்பாளையம் இடையே, குறிப்பிட்ட இடைவெளியில் பயணியர் ரயில் இயக்க வேண்டும். பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், ரயில்களுக்கு தண்ணீர் நிரப்பும் வசதி, ரயில்களை பராமரிக்க 'பிட் லைன்' வசதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.தொழில் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையவும், தென்னை பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலும், பொள்ளாச்சியில் சிறப்பு ரயில் கன்டெய்னர் மண்டலம் அமைக்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை, தொழில் வர்த்தக சபை சார்பில், மக்கள் பிரதிநிதிகள், தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X