கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுஉறுப்பினர் செயலர் ஆஜராக, உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

Added : செப் 15, 2021
Share
Advertisement
மதுரை:தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழியில்லாத கைதிகளுக்கு, சட்ட உதவி வழங்க வழிகாட்டுதல் பிறப்பிப்பது தொடர்பாக, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆஜராக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ஆயுள் தண்டனைதென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே கற்குடியைச் சேர்ந்தவர் பதிபூரணம், 52. இவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக,

மதுரை:தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழியில்லாத கைதிகளுக்கு, சட்ட உதவி வழங்க வழிகாட்டுதல் பிறப்பிப்பது தொடர்பாக, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆஜராக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே கற்குடியைச் சேர்ந்தவர் பதிபூரணம், 52. இவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக, திருநெல்வேலி நீதிமன்றம் 1996ல் ஆயுள் தண்டனை விதித்தது.பதிபூரணம், 'சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. என்னை வழக்கில் தவறாக சேர்த்துள்ளனர். கீழமை நீதிமன்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஜாமினில் அனுமதிக்க வேண்டும். தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என மேல்முறையீடு செய்தார்.

நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு அமர்வு விசாரித்தது. மனுதாரருக்காக சட்ட உதவி மையம் மூலம் ஆஜரான வழக்கறிஞர், 'மேல்முறையீடு செய்ய, மனுதாரருக்கு எவ்வித உதவியும் வழங்கப்படவில்லை.


வழிகாட்டுதல்

சட்ட உதவி மையம் மூலம் இம்மனு 2018ல் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர், 25 ஆண்டு களாக சிறையில் உள்ளார். 'மேல்முறையீடு செய்ய முறையான சட்ட உதவி இல்லாததால், பல தண்டனை கைதிகள் சிறையில் வாடுகின்றனர். அவ்விபரங்களை சேகரித்து, சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு சட்ட உதவி வழங்க, மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவிற்கு வழிகாட்டுதல்களை இந்நீதிமன்றம் பிறப்பிக்கலாம்' என்றார்.

நீதிபதிகள், 'மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் செப்., 17ல் காணொலியில் ஆஜராக வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X