பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.டி.ஐ., கட்டுமான பணி விரைந்து முடிக்க திட்டம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கொழுமம் ரோட்டிலுள்ள, தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்வி பயின்றும் வருகின்றனர்.இந்நிலையில், புதிய கட்டடம் கட்ட, அரசால், 5.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வகையில், அரசு கலைக் கல்லுாரி எதிரே இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள்

உடுமலை:உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கொழுமம் ரோட்டிலுள்ள, தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்வி பயின்றும் வருகின்றனர்.இந்நிலையில், புதிய கட்டடம் கட்ட, அரசால், 5.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அவ்வகையில், அரசு கலைக் கல்லுாரி எதிரே இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக, கட்டுமானப்பணிகள் தடைபட்டன. தற்போது, கட்டடத்தை விரைந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. உரிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், கட்டுமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டும் வருகின்றனர்.இது குறித்து, இதன் முதல்வர் ஜஸ்டின்ஜெபராஜ் கூறுகையில், ''வகுப்பறைகள், ஆய்வகம், தங்கும் விடுதி உள்ளிட்ட கட்டுமானங்கள் நடந்து வருகின்றன. ஒரு மாத காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மாற்றப்பட்டால், கிராமப்புற மாணவர்கள் மிகவும் பயனடைவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X