பொது செய்தி

தமிழ்நாடு

பட்டுப்புழுவியல் படிப்பை தொடர விவசாயிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
உடுமலை:மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி, பட்டுப்புழுவியல் துறையில், மாணவர் சேர்க்கையை தொடர வேண்டும் என, பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கத்தினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.கோவை மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரியில், பட்டுப்புழுவியல் துறையில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை.இதைக்கண்டித்து, அக்கல்லுாரியில் தற்போது படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில்

உடுமலை:மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி, பட்டுப்புழுவியல் துறையில், மாணவர் சேர்க்கையை தொடர வேண்டும் என, பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கத்தினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.கோவை மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரியில், பட்டுப்புழுவியல் துறையில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை.இதைக்கண்டித்து, அக்கல்லுாரியில் தற்போது படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பட்டுப்புழுவியல் துறையில், வழக்கம் போல், மாணவர் சேர்க்கையை தொடர வேண்டும் என, தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கத்தினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து, அச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை: பட்டுக்கூடுகள் உற்பத்தியில், புதிய தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.விவசாயிகளுக்கு இத்தகைய தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதில், பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பு படித்தவர்களின் பங்களிப்பு முக்கியத்தும் வாய்ந்ததாகும்.தற்போது, அரசின் பட்டு வளர்ச்சித்துறையில், இளநிலை ஆய்வாளர், ஆய்வாளர் பணியிடங்கள் அதிகளவு காலியாக உள்ளது. தற்போது இப்பதவிகளுக்கான பட்டப்படிப்பையும் நிறுத்துவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.எனவே, தமிழக அரசு, மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரியில், பட்டுப்புழுவியல் மாணவர் சேர்க்கையை உடனடியாக துவக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில், தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X