பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் சேகரிப்பு திட்டம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : மாவட்டத்தில் போதிய மழையின்மையால் சில ஆண்டுகளாக மிகப் பெரிய பிரச்னையாக நிலத்தடி நீர்மட்டம் உருவெடுத்துள்ளது. குடிநீர் மட்டுமின்றி இதர தேவைகளுக்காக போர்வெல் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் நாளடைவில் நீர்மட்டம் சரிந்து ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது.இதனால் கோடை காலத்தில் வறட்சி ஏற்பட்டு குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இப்பிரச்னையை


திண்டுக்கல் : மாவட்டத்தில் போதிய மழையின்மையால் சில ஆண்டுகளாக மிகப் பெரிய பிரச்னையாக நிலத்தடி நீர்மட்டம் உருவெடுத்துள்ளது.

குடிநீர் மட்டுமின்றி இதர தேவைகளுக்காக போர்வெல் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் நாளடைவில் நீர்மட்டம் சரிந்து ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது.இதனால் கோடை காலத்தில் வறட்சி ஏற்பட்டு குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இப்பிரச்னையை சமாளிக்க, நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க மீண்டும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

மாநகராட்சியின் 48 வார்டுகளில் மொத்தமுள்ள 44 ஆயிரத்து 505 வீடுகளில், 33 ஆயிரத்து 728 வீடுகளில் மட்டுமே மழை நீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 10 ஆயிரத்து 777 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.மேலும் ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்பு வசதியின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியில் 27 களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழைக்கு முன்பாக, குடியிருப்பு வாசிகள் மழைநீர் சேமிப்பு வசதியை உருவாக்குவது கட்டாயம் என, மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X