பொது செய்தி

தமிழ்நாடு

'எல்லைக்கோட்டை தாண்டி உள்ளே வராதீங்க!'

Added : செப் 15, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, ஒன்றிய அலுவலக வளாகத்தில், வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்கள், தெற்கு வேளாண், தோட்டக்கலை துறை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. இதில், வடக்கு ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கும் புதிய கட்டடம் அமைக்க அரசு அனுமதி அளித்தது. புதிய கட்டடம் அமைக்க, பழைய ஒன்றிய கட்டடத்துடன்,
 'எல்லைக்கோட்டை தாண்டி உள்ளே வராதீங்க!'

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, ஒன்றிய அலுவலக வளாகத்தில், வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்கள், தெற்கு வேளாண், தோட்டக்கலை துறை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. இதில், வடக்கு ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கும் புதிய கட்டடம் அமைக்க அரசு அனுமதி அளித்தது. புதிய கட்டடம் அமைக்க, பழைய ஒன்றிய கட்டடத்துடன், தற்போது வேளாண், தோட்டக்கலை துறைகள் செயல்படும் கட்டடங்களையும் சேர்த்து இடித்து அகற்ற வேண்டியுள்ளதாக தெற்கு ஒன்றிய நிர்வாகம் கூறியது.இதற்காக, வேளாண், தோட்டக்கலை துறை அலுவலகங்களை காலி செய்ய, தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. ஆனால், அலுவலகங்களை இடம் மாற்றினால், அலைச்சல், சிரமம் ஏற்படும் என விவசாயிகள் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதே வளாகத்தில் தான் வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும், என, கோரிக்கை எழுப்பியுள்ளனர்.இதையடுத்து, உயர் அதிகாரிகள் மட்டத்தில் இது குறித்து பேச்சு நடக்கிறது. பழைய ஒன்றிய கட்டடம் இடித்து அகற்றப்பட்டுள்ள நிலையில், வேளாண் விரிவாக்க மையம் அதே வளாகத்தில் தொடர்ந்து செயல்படுகிறது. அந்த எல்லைக்குள் அனுமதியின்றி வந்து, கட்டுமான பணிகள், இடிப்பு முயற்சி மேற்கொள்ளக்கூடாது என்பதற்காக, வேளாண் துறையினர் தங்கள் அலுவல எல்லையை குறிக்க, சுண்ணாம்பு பவுடர் கொண்டு எல்லை கோடு வரைந்துள்ளனர்.அரசாங்க துறைகளுக்கும் நடக்கும் இந்த 'எல்லைப் போர்' எப்போது முடிவுக்கு வரும், என, விவசாயிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X