கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவருக்கு 4 ஆண்டு சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவருக்கு 4 ஆண்டு சிறை

Added : செப் 15, 2021
Share
திண்டுக்கல் : நல்லாம்பட்டி அருகே இடப்பிரச்னை காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திண்டுக்கல் நல்லாம்பட்டியில் குடும்பத்துடன் வசிப்பவர் சன்னாசி. இவரது வீட்டின் அருகே செல்வராஜ் என்பவர் குடியிருக்கிறார். இருவருக்கும் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2017 ஏப்ரலில்

திண்டுக்கல் : நல்லாம்பட்டி அருகே இடப்பிரச்னை காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திண்டுக்கல் நல்லாம்பட்டியில் குடும்பத்துடன் வசிப்பவர் சன்னாசி. இவரது வீட்டின் அருகே செல்வராஜ் என்பவர் குடியிருக்கிறார். இருவருக்கும் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2017 ஏப்ரலில் சன்னாசி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜாமணி முருகன் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்தனர்.செல்வராஜின் மகன்கள் சந்திரசேகர் 34, கணேசன் 29 ஆகிய இருவரும் அத்துமீறி உள்ளே புகுந்து அங்கு நட்டு வைத்திருந்த கற்களை பிடுங்கி எறிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சன்னாசியை இருவரும், கட்டை, இரும்பு கம்பியால் தாக்கி தப்பினர்.இது குறித்த புகாரில் தாலுகா போலீசார் விசாரித்து கணேசன், சந்திரசேகர் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நேற்று குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் மோகனா தீர்ப்பளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X