கொப்பரை விலை: உற்பத்தியாளர்கள் கவலை| Dinamalar

கொப்பரை விலை: உற்பத்தியாளர்கள் கவலை

Added : செப் 15, 2021
Share
ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நேற்று, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது.முதல் தர கொப்பரை, 262 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 90.10 முதல், 95.25 ரூபாய் விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 228 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 69.40 முதல், 78 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.மொத்தம், 490 கொப்பரை மூட்டைகளை, 97 விவசாயிகள் கொண்டு
 கொப்பரை விலை: உற்பத்தியாளர்கள் கவலை

ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நேற்று, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது.முதல் தர கொப்பரை, 262 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 90.10 முதல், 95.25 ரூபாய் விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 228 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 69.40 முதல், 78 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.மொத்தம், 490 கொப்பரை மூட்டைகளை, 97 விவசாயிகள் கொண்டு வந்தனர். எட்டு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கொப்பரை, 25 மூட்டைகள் வரத்து அதிகரித்தது; கிலோவுக்கு, 7 ரூபாய் சரிந்தது. கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறுகையில், ''தொடர் மழை காரணமாக கொப்பரை உலர வைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, ஈரப்பதம் அதிகமாக உள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் கேரளாவுக்கு கொப்பரை செல்வது பெரும் அளவு குறைந்தது. இந்தனால், கொப்பரை விலை குறைந்து வருகிறது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X