கனமழையால் பாதிப்பு குளிரால் மக்கள் அவதி

Added : செப் 15, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில், பருவமழை தொடர்ந்து பெய்வதால், கடுங்குளிரால் மக்கள் அவதிப்படுகின்றனர்.வால்பாறையில் இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் தென்மேற்குப்பருவ மழை பெய்யத் துவங்கியது. தொடர்ந்து பெய்யும் கனமழையால், கடந்த ஜூலை மாதம், 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நிரம்பியது. தொடர்ந்து, காடம்பாறை, மேல்ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் நிரம்பின. இதனால் பி.ஏ.பி.,
 கனமழையால் பாதிப்பு குளிரால் மக்கள் அவதி

வால்பாறை:வால்பாறையில், பருவமழை தொடர்ந்து பெய்வதால், கடுங்குளிரால் மக்கள் அவதிப்படுகின்றனர்.வால்பாறையில் இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் தென்மேற்குப்பருவ மழை பெய்யத் துவங்கியது. தொடர்ந்து பெய்யும் கனமழையால், கடந்த ஜூலை மாதம், 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நிரம்பியது. தொடர்ந்து, காடம்பாறை, மேல்ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் நிரம்பின. இதனால் பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்நிலையில், வால்பாறையில், இரவு நேரத்தில் கடுங்குளிர் நிலவுகிறது. தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டுள்ளது. கடுங்குளிராலும், தொடர் மழையாலும் சுற்றுலா பயணிகள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): வால்பாறை - 24, சோலையாறு - 23, மேல்நீராறு - 41, கீழ்நீராறு - 23, பரம்பிக்குளம் - 6, காடம்பாறை - 8, மேல்ஆழியாறு - 2,பெருவாரிப்பள்ளம் - 8, மணக்கடவு - 13, துாணக்கடவு - 3, சர்க்கார்பதி - 3, வேட்டைக்காரன்புதுார் - 6, பொள்ளாச்சி - 15.4 என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X