தமிழ்நாடு

பாதிப்பால் திணறும் தென்னை சாகுபடி...மீண்டு வருமா?வளர்ச்சி வாரியம் கைகொடுக்க காத்திருப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
உடுமலை:வெள்ளை ஈ தாக்குதல், விலை வீழ்ச்சி, சராசரி காய்ப்புத்திறன் குறைவு என உடுமலையின் பிரதானமான, தென்னை சாகுபடி, தொடர் பிரச்னைகளை சந்தித்து வருகிறது; பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த, திருமூர்த்திநகர் தென்னை வளர்ச்சி வாரிய வளாகத்தில், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை உடனடியாக துவக்க வேண்டும்.உடுமலை சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.
  பாதிப்பால் திணறும் தென்னை சாகுபடி...மீண்டு வருமா?வளர்ச்சி வாரியம் கைகொடுக்க காத்திருப்பு

உடுமலை:வெள்ளை ஈ தாக்குதல், விலை வீழ்ச்சி, சராசரி காய்ப்புத்திறன் குறைவு என உடுமலையின் பிரதானமான, தென்னை சாகுபடி, தொடர் பிரச்னைகளை சந்தித்து வருகிறது; பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த, திருமூர்த்திநகர் தென்னை வளர்ச்சி வாரிய வளாகத்தில், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை உடனடியாக துவக்க வேண்டும்.உடுமலை சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தேங்காய், கொப்பரை உற்பத்தி மட்டுமல்லாது, தென்னையை ஆதாரமாகக்கொண்ட, தென்னை நார் உற்பத்தி வாயிலாகவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.இவ்வாறு, பல ஆயிரம் விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரமான தென்னை சாகுபடி தற்போது, தொடர் பாதிப்புகளால், திணறி வருகிறது.குறிப்பாக, வெள்ளை ஈ உட்பட புதிதாக பரவும் பல்வேறு நோய்த்தாக்குதலால், தென்னை மரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த வழி தெரியாமல், வேர் வழியாக மருந்து செலுத்துதல் உட்பட பல்வேறு வழிமுறைகளை பல ஆயிரம் ரூபாய் செலவில், விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.தொடர் நோய்த்தாக்குதலால், மரங்களின் இயல்பான காய்ப்புத்திறன் வெகுவாக குறைந்து விட்டது.இந்நிலையில், சீசன் இல்லாத போதும், தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை சரிந்து விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், விலை சரிவு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.இத்தகைய தருணங்களில், தேங்காய் உட்பட தென்னை மரங்களில் இருந்து பெறப்படும் பொருட்களை மதிப்பு கூட்டவும் வழிகாட்டுதல் போதியளவு இல்லை. இவ்வாறு, அடுக்கு தொடராக, பல்வேறு பிரச்னைகளில், தென்னை சாகுபடி சிக்கித்தவிக்கிறது.திறப்பு எப்போது?திருப்பூர் மற்றும் அருகிலுள்ள மாவட்ட தென்னை விவசாயிகளின் நலனுக்காக, உடுமலை திருமூர்த்திநகரில் மத்திய அரசின், தென்னை வளர்ச்சி வாரிய நாற்றுப்பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிலையம் கடந்த, 2015ம் ஆண்டு துவக்கப்பட்டது.திட்டத்துக்காக, 102 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 65 ஏக்கர் பரப்பில், தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. நாற்றுப்பண்ணையில், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில், தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆனால், ஆராய்ச்சி, தொழில்நுட்ப விழிப்புணர்வு மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சிகள் துவக்க, பல ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.தென்னையிலிருந்து, வெர்ஜின் ஆயில், தேங்காய் பவுடர், நீரா, இளநீர்பானம் உள்ளிட்ட பல்வேறு வகையான மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்யலாம்.இதற்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கினால், தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க முடியும்; விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.தென்னையை பாதிக்கும் புதுவகையான நோய்த்தாக்குதல் குறித்த ஆராய்ச்சிகளைமேற்கொண்டு அதற்கான தீர்வை ஆராய்ச்சி மையம் வாயிலாக வழங்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.திருமூர்த்திநகர் தென்னை வளர்ச்சி வாரிய வளாகத்தில், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக்கூட்டு பொருட்களுக்கு பயிற்சி நிறுவனம் மற்றும் நிர்வாக அலுவலக கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, கட்டட பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.இங்கு, தேவையான தொழில்நுட்ப அலுவலர்கள் நியமித்து, திருப்பூர் மாவட்டத்தில், தத்தளிக்கும் தென்னை சாகுபடியை மீட்க வேண்டும் என்பதே ஆயிரக்கணக்கான விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X