சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் திட்ட பணி இழுபறியால் கிராம மக்கள் மறியல் போராட்டம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
உடுமலை:'ஜல் ஜீவன்' திட்டம் வாயிலாக உடனடியாக குழாய் பதித்து, குடிநீர் வினியோகிக்க வலியுறுத்தி, மூங்கில்தொழுவில், கிராம மக்கள் சாலை மறியலில், ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.குடிமங்கலம் ஒன்றியம், மூங்கில்தொழுவு ஊராட்சியில், 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், குடிநீர் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், புதிதாக பிரதான குழாய் பதித்து,
 குடிநீர் திட்ட பணி இழுபறியால் கிராம மக்கள் மறியல் போராட்டம்

உடுமலை:'ஜல் ஜீவன்' திட்டம் வாயிலாக உடனடியாக குழாய் பதித்து, குடிநீர் வினியோகிக்க வலியுறுத்தி, மூங்கில்தொழுவில், கிராம மக்கள் சாலை மறியலில், ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.குடிமங்கலம் ஒன்றியம், மூங்கில்தொழுவு ஊராட்சியில், 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், குடிநீர் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், புதிதாக பிரதான குழாய் பதித்து, வினியோகத்தை சீராக்க பணிகள் சமீபத்தில் துவங்கியது.இந்நிலையில், நேற்று மாலை, மூங்கில்தொழுவு பிரிவில், கிராம மக்கள், அரசு பஸ்சை சிறைப்பிடித்து, சாலை மறியல் போராட்டத்தில், ஈடுபட்டனர்.சம்பவ இடத்துக்கு, குடிமங்கலம் பி.டி.ஓ., சுப்பிரமணி, குடிமங்கலம் போலீசார் உட்பட அதிகாரிகள் குழுவினர், சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது, கிராம மக்கள், 'குடிநீர் திட்ட விரிவாக்கப்பணிகளை உடனடியாக மேற்கொண்டு, வினியோகத்தை துவக்க வேண்டும். தற்போது போதியளவு குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம். ஒரு சிலரின் எதிர்ப்புக்காக, திட்டப்பணிகளை தாமதப்படுத்தகூடாது.தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்றனர்.அதிகாரிகள் தரப்பில், 'வருவாய்த்துறையினருடன், இணைந்து குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்படும் இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்களுக்குள் பணிகளை முடித்து, குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.இதையடுத்து, மறியல் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். போராட்டத்தால், சில மணி நேரம் மூங்கில்தொழுவு ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X