பணம் பட்டுவாடா செய்து 40 நாளாச்சு: தவியாய் தவிக்கும் பால் உற்பத்தியாளர்கள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கோவை மாவட்டத்தில், கூடுதல் வருவாய்க்காக விவசாயிள் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.கிராமங்கள் தோறும் செயல்படும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிறுவனமான ஆவின், விவசாயிகளிடம் இருந்து, சராசரியாக ஒரு லிட்டர் பால், 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. விவசாயிகளுக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறை பால் பணம் பட்டுவாடா

கிணத்துக்கடவு:கோவை மாவட்டத்தில், கூடுதல் வருவாய்க்காக விவசாயிள் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.கிராமங்கள் தோறும் செயல்படும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிறுவனமான ஆவின், விவசாயிகளிடம் இருந்து, சராசரியாக ஒரு லிட்டர் பால், 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. விவசாயிகளுக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறை பால் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.இந்நிலையில், கடந்த, 40 நாட்களாக பால் கொள்முதல் செய்ததற்கான தொகையை, பால் கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகளுக்கு வழங்காமல் தாமதித்து வருகிறது. இதனால், விவசாயிகள் குடும்ப செலவுக்கும், கறவை மாடுகளுக்கு தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை உள்ளிட்ட தீவனங்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.பால் பணம் பட்டுவாடா தாமதம் குறித்து, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களில் கேட்ட போது, 'பால் விலையை அரசு லிட்டருக்கு, மூன்று ரூபாய் குறைத்ததால், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பாதித்துள்ளன. கோவை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் இருந்தும், பால் கொள்முதலுக்கான தொகை வருவதில்லை.இதை தவிர்க்க, சில பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், தங்களது நிரந்தர வைப்பு நிதியைக் கொண்டு, விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளன. பெரும்பாலான கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு பணம் கையிருப்பு இல்லை,' என்றனர்.இதற்கு தீர்வு காண, மாவட்ட ஆவின் நிறுவனங்கள், அரசிடம் இருந்து கடன் பெற்றாவது, பால் உற்பத்தியாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் பணம் வழங்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X