பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி கட்டுமானம் கூடாது: நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

Added : செப் 15, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:''பொள்ளாச்சி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அனுமதி பெற்றே கட்டடம் கட்ட வேண்டும்,'' என, கமிஷனர் தாணுமூர்த்தி தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தற்போது கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மற்றும் இனிவரும் காலங்களில் கட்டப்படும் கட்டடங்களுக்கு முறையாக

பொள்ளாச்சி:''பொள்ளாச்சி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அனுமதி பெற்றே கட்டடம் கட்ட வேண்டும்,'' என, கமிஷனர் தாணுமூர்த்தி தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தற்போது கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மற்றும் இனிவரும் காலங்களில் கட்டப்படும் கட்டடங்களுக்கு முறையாக நகராட்சியில் விண்ணப்பித்து, உரிய ஆவணங்களுடன் சமர்பித்து அனுமதி பெற்றே கட்டடம் கட்டப்பட வேண்டும்.அவ்வாறு அனுமதி பெற்று கட்டப்படும் கட்டடங்கள், நகராட்சியால் வழங்கப்படும் கட்டட வரைபட அனுமதியில் உள்ளவாறு மாற்றங்கள் ஏதும் செய்யப்படாமல் இருக்க வேண்டும்.குறிப்பாக, வணிக உபயோக கட்டடங்களுக்கு தேவையான வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். அனுமதி பெறாமலும், பெறப்பட்ட அனுமதிக்கு மாறாகவும் கட்டப்படும் கட்டட உரிமையாளர்கள் மீது, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டப்படி, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு செய்யவும், தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டப்படி, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டுமான பணிகள் நிறுத்தப்படும். அந்த கட்டடங்களை மூடி முத்திரையிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.அதே சமயம், தொடர்ச்சியாக கட்டுமான பணி செய்யும்பட்சத்தில் அக்கட்டுமானப் பணி நடக்கும் இடங்களில் உள்ள, கட்டுமான பொருட்கள் அனைத்தும் நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். அதற்குண்டான செலவுத்தொகை கட்டட உரிமையாளரிடம் இருந்து வசூல் செய்யப்படும்.அனுமதியின்றி மற்றும் அனுமதிக்கு மாறாக கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, நகராட்சியால் புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வழங்க இயலாது. புதிய மின் இணைப்பு வழங்க நகராட்சியால் தடையில்லா சான்று வழங்க இயலாது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X